சபரிமலையில் கூட்டம் அள்ளுது..‘இந்த’ வழியாக செல்லும் பக்தர்களுக்கு தனி வரிசை! வெளியான செம அறிவிப்பு.!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சன்னிதானமே பக்தர்கள் கூட்டத்தால் திணறுகிறது. இந்நிலையில் பெருவழிப் பாதை வழியாக வரும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில், தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சபரிமலை தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கியது.

இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினர். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.
தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு படை எடுத்துள்ளனர்.
தொடர்ந்து அன்று முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு நெய், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு நடை சாற்றப்பட்டு பின்னர் மூன்று மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
பின்னர் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலையில் பின்னர் ஹரிவராசனம் இசைக்கப்பட்டு ஐயன் ஐயப்பன் துயில் செல்கிறார். இந்த நிலையில் நாளுக்கு நாள் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும், புல்மேடு, எரிமேலி வழியாகவும் தரிசனத்துக்கு வருகின்றனர்.
குறிப்பாக எருமேலியில் பேட்டை துள்ளிய பிறகு புல்மேடு, எரிமேலி வழியாக பெருவழி எனப்படும் வனப்பாதையில் பக்தர்கள் அதிகளவு ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர். மற்றொருபுறம் பம்பையில் இருந்து நேரடியாக சபரிமலை சன்னிதானத்திற்கு செல்லலாம். ஆனால் பெருவழிப் பாதையில் வரும் பக்தர்களும் சிறுவழிப்பாதையில் வரும் பக்தர்களும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்கிறார்கள். இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் பெருவழிப்பாதை வழியாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு வரிசை அமைக்க சபரிமலை தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதை அடுத்து எரிமேலி வழியாக வனப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் பாதயாத்திரை தொடங்கும் பகுதியிலேயே வனத்துறை சார்பில் டோக்கன்கள் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்யலாம்.
மேலும் தற்போது கேரளாவை சேர்ந்த போலீசாரும், அதிகாரிகளும் அங்கு பணியில் இருக்கிறார்கள். ஆனால் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதால் மொழி பிரச்சனை இருக்கிறது. இதை அடுத்து தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கவும், மரியாதை குறைவாக நடத்துவதை தவிர்க்கும் வகையில் கேரளாவில் சபரிமலை கோவிலில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முக்கியமான வார்த்தைகளை பேசுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications