வெடித்து சிதறிய செல்போன்.. பலியான 8-வயது சிறுமி.. ரெட்மி நிறுவனம் கொடுத்த விளக்கத்தை பாருங்க
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் ரெட்மி போனில் வீடியோ பார்த்துக் கொண்டு இருந்த சிறுமி, செல்போன் வெடித்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ரெட்மி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
செல்போன் பயன்பாடு உலகம் முழுவதும் பெருகிவிட்டது. அதிலும் இந்தியாவில் இதைப்பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. வீட்டிற்கு ஒரு போன் இருப்பதே அரிதாக காணப்பட்ட காலம் மாறி இன்று ஆளுக்கு ஒரு செல்போன் என மாறிவிட்டது. அதிலும் ஸ்மார்ட் போன் வருகைக்கு பிறகு செல்போன்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.
இன்னும் சொல்லப்போனால், செல்போனுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லலாம். வெறும் பேசுவதற்கு மட்டும் பயன்பட்ட செல்போன்கள், ஸமார்ட் போன்கள் வருகைக்கு பிறகு பணம் அனுப்புவதில் தொடங்கி, வாகனம் புக் செய்வது வரை மக்களின் அனைத்து தொழில் நுட்ப பயன்பாட்டிற்குமான கருவியாக மாறிப்போனது.

நேரம் போகவில்லை என்றால் வீடியோ கேம் விளையாடுவது,... வீடியோக்கள் பார்ப்பது என நேரத்தை செலவிடவும் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் குழந்தைகள் கூட செல்போனைக் கண்டால் தற்போது அழுகையை நிறுத்தி விடுகின்றன. இதனால் குழந்தையை சமாதானப்படுத்த பலரும் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன்களை கையில் கொடுத்து விளையாட விடுகின்றனர். இதனால் குழந்தைகளின் கவனமும் சிதற வாய்ப்புள்ளது.
இது ஒருபக்கம் என்றால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக செல்போன் வெடித்து சிதறியதில் 8-வயது சிறுமி உயிரிழந்த சோகமும் நடைபெற்றது. கேரளாவில் திருச்சூர் மாவட்டம் திருவில்லா அருகே உள்ள பட்டிபரம்பு பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் 8 வயது மகள் ஆதித்யா ஸ்ரீ . அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த ஆதித்யா ஸ்ரீ தனது தந்தை செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதில் தீக்காயம் அடைந்த சிறுமியை பெற்றோர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிசை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் ஆதித்யா ஸ்ரீ உயிரிழந்தாள். செல்போன் வெடித்ததில் 8-வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிறுதி ஆதித்யா ஸ்ரீ, ரெட்மி நிறுவனத்தின் செல்போனை பயன்படுத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இதுகுறித்து ரெட்மி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஜியோமி தனது தரப்பு கருத்தை தெரிவித்துள்ளது. ஜியோமி நிறுவனம் கூறுகையில், " வாடிக்கையாளர்களின் பாதுகாப்புத்தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இது போன்ற விவகாரங்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வோம்.
இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். சாத்தியமான வழிகளில் அவர்களுக்கு உதவ முடியும் என நம்புகிறோம். வெடித்தது ரெட்மி போன் என்று சில தகவல்கள் வெளியாகின்றன. எனினும் இது உறுதியாகவில்லை. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இந்த சம்பவத்தின் உண்மை காரணம் குறித்து கண்டறிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவோம். தேவையான வகையில் அவர்களுக்கு ஆதரவு அளிபோம்" என்று தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications