பாலியல் புகார் கூறியதால் உணவில் எனக்கு ஸ்லோ பாய்சன்.. பகீர் கிளப்பும் சரிதா நாயர்.. பரபரக்கும் கேரளா
திருவனந்தபுரம்: தனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்ததாகவும் உணவில் விஷம் கொடுத்து கொல்ல முயற்சிப்பதாகவும் சோலார் பேனல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் பகீர் தகவலை கிளப்பியுள்ளார்.
தமிழகம், கேரளாவில சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக தொழிலதிபர் சரிதா நாயர் மீது புகார் எழுந்தது.
உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இந்த முறைகேடு நடந்தது. இந்த சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். இவர் அப்போது முதல்வராக இருந்த உம்மன் சாண்டி மீது பாலியல் குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தார்.

ஜாமீன்
இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ள சரிதா நாயர் கேரள அரசியல் பிரமுகர்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த நிலையில் சரியா நாயர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸிஸ் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இடது கண்ணில் பார்வை குறைபாடு உள்ளது.

முடி கொட்டுதல்
எனது முடியும் அதிகமாக கொட்டி விட்டது. மேலும் உடலில் தோலில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது என்னை ரத்த பரிசோதனை எடுக்கச் சொன்னார்கள், அதில் அதிக அளவுக்கு ஆர்சனிக், பாதரசம், ஈயம் உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இந்த ரசாயனங்கள் விஷத்தன்மை கொண்டது.

மெல்ல கொல்லும் விஷம்
இவை என் உடலில் கலந்தால் நான் மெல்ல மெல்ல இறக்கும் நிலைக்கு சென்றுவிடுவேன். இதற்காகவே எனக்கு மெல்ல கொல்லும் விஷத்தை கொடுத்துள்ளனர். நான் அடிக்கடி குடிக்கும் ஜூஸ், குளிர்பானம் உள்ளிட்ட உணவு பொருட்களில் கலந்து கொடுத்துள்ளனர். இதை யார் கொடுத்தார்கள் என எனக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது தெரியவந்தது.

ஜூஸ் குடிக்க சென்றேன்
அண்மையில் நான் திருவனந்தபுரம் சென்றேன். அப்போது ஜூஸ் குடிக்க காரை நிறுத்த சொன்னேன், டிரைவர் வினுகுமாரிடம் வாங்கி வருமாறு சொன்னேன். அவர் ஜூஸை வாங்கி வந்து அதில் எதையோ கலந்ததை நான் பார்த்துவிட்டேன். ஆனால் அவரை நான் பணியிலிருந்து நீக்கிவிட்டேன். எனவே எனக்கு அவர் மீது சந்தேகம் உள்ளது. பிறகு அவரை நான் பணியிலிருந்து நீக்கிவிட்டேன்.

அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார்
கடந்த 2018ஆம் ஆண்டு நான் அரசியல் பிரமுகர்கள் சிலர் மீது பாலியல் புகார் கொடுத்தேன். இதனால் என்னை கொல்ல திட்டமிட்டு வினுகுமார் மூலம் எனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்தார்கள். 2018 ஆம் ஆண்டு முதல் எனக்கு நரம்பு பிரச்சினை ஏற்பட்டது. எனக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹீமோதெரபி கொடுக்கப்பட்டது. ஆயினும் எனது பிரச்சினை தீரவே இல்லை. இதனால் என்னை மருத்துவர்கள் உயர்தர சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளார்கள். எனவே இதுகுறித்து வினுகுமாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சரிதா நாயர் பரபரப்பு புகாரை கூறியுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சோலார் பேனல் வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் நிலையில் அந்த வழக்கை திசைத்திருப்பும் கோணத்தில் சரிதா நாயர் ஸ்லோ பாய்சன் புகாரை கூறியுள்ளாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மனைவி ஊருக்கு போன நேரத்தில்..வீட்டுக்கு வந்த கள்ளகாதலி! ப்ரிட்ஜில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சி -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications