கேரள லாட்டரியில் ரூ.50 லட்சம் பரிசு! ஆசையாய் இருந்த கர்நாடக நபருக்கு திடீர் ஷாக்! நடந்த ஹைடெக் மோசடி
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதில்லை. ஆனால் கேரளா ஆன்லைன் லாட்டரி டிக்கெட் என்று சொல்லி விற்கப்பட்ட லாட்டரி சீட்டை வாங்கிய கர்நாடக நபருக்கு ரூ.50 லட்சம் பரிசு அடித்துள்ளதாக காட்டப்பட்டது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த அவருக்கு கேரளா சென்ற பிறகே தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக தற்போது விசாரணை தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு அனுமதி உள்ளது. மாநில அரசே லாட்டரி டிக்கெட்டை அச்சிட்டு விற்பனை செய்கிறது. ஓணம் பம்பர், ஆயுத பூஜா பம்பர், கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், சம்மர் பம்பர், விஷூ பம்பர், மான்சூன் பம்பர் என ஆறு வகையான பம்பர் லாட்டரிகளும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த லாட்டரிக்கு பல கோடி ரூபாய் முதல் பரிசாக அறிவிக்கப்படும்.

ஓணம் லாட்டரிக்கு ரூ.25 கோடி முதல் பரிசுத்தொகையாகும். இந்த ஆண்டு ஓணம் பம்பர் பரிசு குலுக்கலில் முதல் பரிசு கர்நாடகாவை சேர்ந்த அல்தாப் என்பவருக்கு அடித்தது. வயநாட்டில் அவர் வாங்கிய டிக்கெட் TG 434222 என்ற அதிர்ஷ்ட எண் முதல் பரிசை அடித்தது. அவ்வப்போது அண்டை மாநிலத்தை சேர்ந்தவகளுக்கும் லாட்டரியில் பரிசு அடிக்கிறது.
இதனால் மாநில எல்லையில் லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது. அதே நேரத்தில் கள்ள சந்தையில் விற்கப்பட்ட டிக்கெட் என்றால், முதல் பரிசு அடித்தாலும் பரிசுத்தொகை கிடைக்காது. கேரளாவை பொறுத்தவரை பம்பர் குலுக்கல் மட்டும் இன்றி தினமும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளின் விலை ரூ.40 ஆகும். முதல் பரிசாக ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கிடைக்கிறது.
இதனால், அங்கு தினம் தோறும் லாட்டரி டிக்கெட் விற்பனை களை கட்டுகிறது. லாட்டரியில் மோகம் கொண்டவர்கள் தினமும் லாட்டரி வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதேவேளையில், லாட்டரி டிக்கெட்டுகள் என்ற பெயரில் நூதன முறையில் முறைகேடுகளும் அதிகரித்து வருகின்றன. கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் இந்த மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-
கேரளாவில் லாட்டரிகள் ஆன்லைனில் விற்கப்படுவது இல்லை. கடைகளில் மட்டுமே லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சமீப காலமாக ஆன்லைனில் கேரள லாட்டரிகள் கிடைக்கும் என்று போலியாக விளம்பரம் செய்து சில கும்பல் ஏமாற்றுகிறது. இது தெரியாமல் பலரும் ஆன்லைன் லாட்டரியை வாங்கி ஏமாந்து போகிறார்கள். இப்படித்தான் கர்நாடாகவை சேர்ந்த ஒருவர் கேரள ஆன்லைன் லாட்டரி என்ற போலியான இணையதளத்தில் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
இவர் வாங்கிய லாட்டரிக்கு ரூ. 5 லட்சம் பரிசு விழுந்து இருப்பதாக காட்டியிருக்கிறது. இதனால், மகிழ்ச்சியடைந்த அவர் கோட்டயத்தில் உள்ள லாட்டரி ஏஜெண்டை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியிருக்கிறார். அங்கு சென்ற பிறகு தான் அவருக்கு இது மோசடி என்று தெரியவந்துள்ளது. ஜிதேந்திர சவுகான் என்ற பெயரில் ஆன்லைனில் போலியாக ஒருவர் டிக்கெட்டை விற்று வந்தது தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம் முகவரியை தனது வெப்சைட்டில் கொடுத்துள்ளார். கேரள லாட்டரி துறைக்கு இது பற்றிய தகவல் கிடைத்துள்ளதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ஆன்லைனில் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவது இல்லை என்பதால், அதை நம்பி ஏமாற வேண்டாம் என கேரள லாட்டரி துறை அறிவுறுத்தியுள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications