பள்ளி, கல்லூரி ரீ-யூனியன்களால் பழைய காதல் மலர்ந்து பிரச்சினை வெடிக்கிறது! போலீஸ் அதிகாரி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பள்ளி, கல்லூரி நாட்கள் அனைவருக்கும் மறக்க முடியாதவை. நண்பர்கள், காதல், மகிழ்ச்சி, கனவுகள் என கலந்த ஒரு அழகான கனா காலம். வரவுகள் இன்றி செலவு செய்ய லைசென்ஸ் பெற்ற பொற்காலம். ஆனால், காலம் கடந்த பிறகு சிலருக்கு அந்த நினைவுகள் மறக்க முடியாததாக மாறுகிறது. அதற்காகவே, பழைய மாணவர் அமைப்புகள் நண்பர்களை மீண்டும் இணைக்கும் பாலமாக வளர்ந்துள்ளன. விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்திற்கு பிறகு தமிழகத்திலும் பழைய மாணவர் சந்திப்பு பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அதிகரித்துள்ளது.

வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் உதவியுடன் பழைய மாணவர்கள் தொடர்பு கொள்வது அதிகரித்துள்ளது. இது நெகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், சிலர் இதை பழைய காதலியை/காதலருடன் பழக ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

love school

கேரளாவின் தச்சக்கோடு சாச்சிப்புன்னா கலாச்சார நிகழ்ச்சியில் உரையாற்றிய அந்த போலீஸ் அதிகாரி இதுதொடர்பாக கூறுகையில், "நான் காவல் நிலையத்தில் இப்போதெல்லாம் பழைய மாணவர்கள் தொடர்புடைய குடும்ப புகார்களை அதிகம் எதிர்கொள்கிறேன். பலர், இப்போது தான், அப்போது சொல்ல முடியாத காதலை வெளிப்படுத்துகிறார்கள். இதனால் குடும்பப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஏற்கனவே முப்பதுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

அனைவரும் நன்கு வாழ வேண்டும் என்றுதான் குடும்பத்தை அமைக்கிறோம். எனவே அதற்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். குடும்ப உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து, தற்காலிக மகிழ்ச்சிகளை தேட வேண்டாம்", என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குடும்ப வாழ்க்கையை பாதிக்கக்கூடிய இந்த நடைமுறையை சிலர் எதிர்க்க, சிலர் இது சாதாரண சம்பவம், பெரிதாக எதுவும் இல்லை, அளவு கடந்து செல்வது வெகு சிலரே, மனைவி அல்லது கணவர் சந்தேகப்பேர்வழியாக இருந்தால் பிரச்சினைகள் வந்திருக்க கூடும் எனத் தெரிவிக்கின்றனர். ஆனால் போலீஸ் அதிகாரியோ, காவல் நிலையத்திலேயே இது தொடர்பான புகார்கள் அதிகரித்துவிட்டன என்கிறார்.

பழைய மாணவர் சங்கங்கள் உண்மையில் உறவுகளை வளர்க்கிறதா? புதிய பிரச்சனைகளை உருவாக்குகிறதா? உங்கள் கருத்து என்ன?

ரீ-யூனியன் கலாசாரம்

"96" திரைப்படத்தில் ரீயூனியன் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகவும், கதையின் திருப்புமுனையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பிரேம் குமார், ரீயூனியன் காட்சிகளை மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்திருந்தார். ராம் மற்றும் ஜானு இருவரும் தங்களது கடந்த கால நினைவுகளை அசைபோடும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டன.

ரீயூனியனில் பழைய நண்பர்கள் சந்தித்து பேசும்போது, தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். இது பார்வையாளர்களுக்கு Nostalgic உணர்வை ஏற்படுத்தி தங்களையும் அதேபோல பொருத்திப் பார்க்க தூண்டியது.

96 திரைப்படம் வெளியானபோது, ரீயூனியன் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. பலரும் தங்களது பள்ளி மற்றும் கல்லூரி கால நினைவுகளை இக்காட்சிகளோடு தொடர்புபடுத்தி பார்த்தனர். 96 திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, மலையாளம் உட்பட பல திரைப்படங்களில் ரீயூனியன் காட்சிகள் இடம்பெறத் தொடங்கின. இது ஒரு புதிய ட்ரெண்டாகவே மாறியது. கேரளாவிலும் பல படங்கள் இப்படி வெளியாகி ரீயூனியன்கள் அதிகரித்துவிட்டன என்கிறார்கள்.

ரீயூனியனில் ஒருவர் மற்றவருடன் அதிகமாக பேசினாலோ அல்லது பழகினாலோ, அது காதல் அல்லது வேறு விதமான உறவுக்கு வழிவகுக்கும், அல்லது அப்படி பிறரால் கிசுகிசு பேசப்படும். எனவே, அனைவரிடமும் சமமாக பழகவும், தனிப்பட்ட உரையாடல்களைத் தவிர்க்கவும் முயற்சி செய்யுங்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

ரீயூனியன் என்பது பழைய நினைவுகளைப் புதுப்பிக்கவும், நட்பை வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பு. எனவே, அதில் கலந்து கொள்ளும்போது, மற்றவர்களின் வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல், நல்ல நண்பனாக இருக்க முயற்சி செய்யுங்கள். ரீயூனியனில், உங்கள் பழைய காதலைப் பற்றியோ அல்லது கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்களைப் பற்றியோ அதிகம் பேச வேண்டாம். அது மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ரீயூனியனில் கலந்து கொள்ளும்போது, அனைவரிடமும் நட்பாகவும், மகிழ்ச்சியாகவும் பழகுங்கள். மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து தெரிவிக்காதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+