சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில்.. துள்ளி குதிக்கும் சேட்டன்கள்.. மேட்டர் இதுதான்!
திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. புதிய டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் சென்னை ஐசிஎப்பில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
வந்தே பாரத் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பார்ப்பதற்கு புல்லெட் ரயில் போன்ற வெளித்தோற்றம் கொண்ட இந்த ரயில் பல்வேறு வசதிகளையும் கொண்டது ஆகும். எக்ஸ்பிரஸ் ரயில்களுடன் கூடுதல் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில்கள் முழுவதுமாக ஏசி வசதி கொண்டது ஆகும்.

அது மட்டும் இன்றி வைஃபை வசதி, தானியங்கி கதவுகள், பெரிய ஜன்னல்கள், பயோ டாய்லட்டுகள் என ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. வந்தே பாரத் ரயிலில் ரயில் பெட்டியுடன் சேர்ந்தே என்ஜின் இருக்கும். நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் இரண்டு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை- கோவை மற்றும் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு என மொத்தம் 2 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் சென்னை - நெல்லை இடையேயும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கேரளாவில் தற்போது ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காசர் கோடு - திருவனந்தபுரம் இடையே இந்த ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கேரளாவுக்கு மேலும் ஒரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தான் பாலக்காடு தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட ரயில், சென்னையில் இருந்து நேற்று இரவு 8.42 மணிக்கு மங்களூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயில் இன்று மங்களூர் சென்று சேர்ந்துள்ளது. வந்தே பாரத் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்ட இந்த ரயில் இன்று மங்களுருவில் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்பது நடப்பு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. மங்களூர் - திருவனந்தபுரம், மங்களூர் - எர்ணாகுளம், மங்களூர் - கோவை, மடேகான் (கோவை)- எர்ணாகுளம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு வழித்தடத்தில் இயக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications