அடிக்கடி அபார்ஷன்கள்.. ஆண் தொடர்புகள்.. இதே "ஜோலி"யாகவே இருந்திருப்பார் போல கேரளத்து ஜோலி!
கொலைகாரி ஜோலிக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பு இருக்கும் என கூறப்படுகிறது
Recommended Video
திருவனந்தபுரம்: நிறைய ஆண்களுடன் தொடர்பு.. நிறைய அபார்ஷன்கள்.. இதுதான் ஜோலியின் ஜோலியாகவே இருந்திருக்கிறது என்று சந்தேகப்படுகிறார்கள் போலீசார்.
ஜோலிதான் இப்போது கேரளாவின் ஹாட் டாப்பிக்! சொத்துக்காக சொந்த வீட்டிலேயே ஆறு பேரை ஆட்டுக்கால் சூப்பில் விஷம் வைத்து கொன்றவர்தான் இந்த ஜோலி என்ற பெண்!
14 வருட சம்பவம் இது என்றாலும், இப்போதுதான் விஷயம் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கொலையும் ஒரே மாதிரியான கொலைதான்!

அன்னம்மா
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி அருகே உள்ள பகுதி கூடத்தொரை. இங்கு வசித்து வந்தவர் ஜான் தாமஸ். இவர் ஓய்வு பெற்ற ஒரு கல்வி அதிகாரி. இவரது மனைவி அன்னம்மாவும், ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியை. மகன் ரோய் தாமஸ் மற்றும், அன்னம்மாளுடன் அண்ணன் மேத்யூ, ஜான் தாமசின் அண்ணன் மருமகள் பீலி, அவரது ஒரு வயது குழந்தை அல்பன் என இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.

போஸ்ட் மார்ட்டம்
இந்நிலையில் 2002 முதல் 2016 வரை இவர்கள் 6 பேருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர். எப்படி இறந்தார்கள் என்றே தெரியவில்லை. ஒரே மர்மமாக இருந்தது. ஆறு பேரின் சாவுமே ஒரே மாதிரியாக இருந்தது. அந்த சமயத்தில், இந்த உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர்கள் இது சாதாரணமான மரணம் என்று சொல்லிவிட்டார்கள். இதையடுத்து உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன.

உடல்கள்
ஆனாலும் 6 பேர் இறந்ததில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று கோழிக்கோடு போலீசாரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கவும்தான், உடல்களை திரும்பவும் போஸ்ட்மார்ட்டம் செய்யலாம் என்று முடிவு செய்து, தோண்டி எடுத்து, கிடைத்த எலும்பு கூடு பாகங்களை ஆய்வுக்கும் அனுப்பி வைத்தனர். அப்போதுதான் 6 பேரின் உடல்களிலும் விஷம் இருந்தது உறுதியானதுடன், சொத்தை அபகரிக்க மருமகள் ஜோலி செய்த காரியம் இது என்பது தெரியவந்தது.

தகவல்
இத்தனை காலம் தலைமறைவாக இருந்த ஜோலியை தீவிரமாக தேடி வந்த நிலையில், இப்போதுதான் கைது செய்துள்ளனர் போலீசார்.. விசாரணையில் ஜோலி சொல்லும் ஒவ்வொரு தகவலையும் கேட்டு கேரளாவே ஆடிப்போய் உள்ளது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஜோலிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து இருக்கிறது. இதை பற்றி 2வது கணவன் ஷாஜூவிடம் கேட்டதற்கு தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லி வருகிறாராம்.

பெண்கள்
இதைவிட பெரிய ஷாக் என்னவென்றால், ஜோலிக்கு பெண்களே பிடிக்காதாம். அதனால்தான், மாமியார் மாமியார் அன்னம்மா, 2வது கணவன் ஷாஜூவின் மனைவி சிலி, அவரது மகள் ஆல்பைன் என பெண்களை குறி வைத்து கொன்றுள்ளார். இவர்களை தவிர, மேலும் 5 பெண்களையும் கொலை செய்ய முயற்சியும் செய்திருக்கிறாராம். இப்படி இன்னும் பகீர் பகீர் விஷயங்கள் ஜோலியின் விவகாரத்தில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

அதிர்ச்சி
விசாரணையின்போது தனது தவறுகளை தயக்கமே இல்லாமல் ஒப்புக் கொண்டுள்ளார் ஜோலி. மேலும் இதற்காக அவர் கலங்கியது போலவும் தெரியவில்லை. அவருடைய இலக்கு பணம் மற்றும் சாஜுவாகவே இருந்துள்ளது. ஆனால் அவரது பின்னணியில் மேலும் பல அதிர்ச்சிகள் மறைந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications