நர்சு போல வேடமிட்டு.. காற்றடைத்த ஊசியை செலுத்தி காதலனின் மனைவியை கொல்ல முயற்சி.. அதிர்ந்து போன கேரளா
திருவனந்தபுரம்: கேரளாவில் காதலனின் மனைவியை தீர்த்துக் கட்டுவதற்காக நர்சு போல வேடமிட்டு, நரம்பில் காற்றை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியானது.
திருமணம் ஆன தனது முன்னாள் காதலனின் மனைவியை கொலை செய்யும் திட்டத்துடன் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு திட்டம் தீட்டி, கையும் களவுமாக பெண் ஒருவர் சிக்கிக் கொண்டுள்ளார். திடுக்கிட வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: - கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் அருண். இவருடைய மனைவி சினேகா. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அருண் - சினேகா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சினேகா மருத்துவமனையில் குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து மருத்துவ பராமரிப்பில் இருந்து வந்தார். அப்போது நேற்று முன் தினம் மாலையில், மருத்துவமனைக்கு திடீரென்று புதிதாக அனுஷா (வயது 25) என்ற பெண் வந்தார்.
நர்சு போலவே வேடமிட்டு வந்த அந்த பெண், தனக்கு அருணை நன்றாக தெரியும் என்றும் இதே மருத்துவமனையில் தான் நர்சாக வேலை செய்து வருவதாகவும் கூறினார். கணவருக்கு தெரிந்தவர் இந்த மருத்துவமனையில் நர்சாக இருப்பதால் கூடுதல் அக்கறையுடன் கவனிப்பார்கள் என்று சினேகா நினைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் மீண்டும் சினேகா அறைக்கு வந்த அனுஷா, ஊசி போட வேண்டும் என்றும் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.
சிறிது நேரத்தில் மருந்து எதுவும் நிரப்பப்படாத ஊசியுடன் அங்கு வந்த நர்சு வேடமிட்ட அனுஷா, சினேகா கை நரம்புகளில் அந்த ஊசியை செலுத்த முயன்றார். இதைப் பார்த்த சினேகாவின் தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனினும், வலுக்கட்டாயமாக ஊசியை குத்த முயற்சித்து இருக்கிறார். நர்சின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சினேகா மற்றும் அவரது தாயார் கத்தி கூச்சல் போட்டனர்.
சத்தம் கேட்டு மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் அங்கு ஓடிவந்தனர். அங்கு மருத்துவமனைக்கு சற்றும் தொடர்பும் இல்லாத பெண் ஒருவர் நர்சு போல நின்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அனுஷா என்ற அந்த பெண்ணை அருகிலுள்ள புளிக்கீழ் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
காயங்குளம் கண்டல்லூரை சேர்ந்த அனுஷா (நர்சு வேடமிட்டவர்)வுக்கும் அருணுக்கும் முன்பே பழக்கம் இருந்துள்ளது. திருமணம் ஆன பிறகு இவர்களுக்குள் தொடர்பு இலலாமல் இருந்துள்ளது. அனுஷாவின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறாராம். இந்த நிலையில் சமீபத்தில் முன்னாள் காதலனான அருணை மீண்டும் அனுஷா பார்த்துள்ளார். அப்போது முதல் இருவரும் தங்கள் பழைய காதலை வளர்க்க தொடங்கியிருக்கிறார்கள்.
அருணுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற விபரீத எண்ணம் அனுஷாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருணின் மனைவியான சினேகாவை கொன்றால் அவருடன் சேர்ந்து வாழலாம் என்று அனுஷா எண்ணியிருக்கிறார். சினேகா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் விஷயம் அறிந்த அனுஷா, மருத்துவமனையில் வைத்தே தீர்த்து கட்டிவிடலாம் என்ற எண்ணத்துடன் , கடைக்கு சென்று நர்சுகள் அணியும் ஆடையை வாங்கி அணிந்துவிட்டு காற்று ஏற்றிய ஊசியை செலுத்தி கொலை செய்து விடலாம் என்று திட்டம் தீட்டியிருக்கிறார்.
போலீசாரை திடுக்கிட வைக்கும் வகையில் சினிமா பாணியில் திட்டம் வகுத்து அனுஷா செயல்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அனுஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில், இந்த கொலை முயற்சியில் அருணுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
கேரளாவில் அரசு பேருந்துகளில் இனி இலவச பயணம்! சாதனை உத்தரவில் கையெழுத்திட்ட பெண் செயலாளர்! சூப்பர் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கேரள லாட்டரியில் ரூ.1 கோடி + 25 லட்சம்.. எர்ணாகுளத்திற்கு அடுத்தடுத்து பரிசு மழை! வின்னர் யார்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications