அமைச்சரவை வேண்டாம்.. முதல்வராக்கிடுங்கள்.. சைலஜாவுக்கு பெருகும் ஆதரவு.. பினராயிக்கு குவியும் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: சைலஜா டீச்சருக்கு அமைச்சர் பதவி கொடுக்காவிட்டால் முதல்வர் பதவியை விட்டு கொடுங்கள் என பினராயி விஜயனுக்கு கோரிக்கைகளுடன் எதிர்ப்புகள் குவிகின்றன.
Recommended Video
கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரிகள் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறது. அக்கட்சியின் முதல்வராக இன்றைய தினம் இரண்டாவது முறையாக பதவியேற்கிறார் பினராயி விஜயன்.
கேரள மக்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சைலஜா டீச்சர், கட்சியின் விதிகளை காரணம் காட்டி அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை. இதற்காக மலையாள நடிகைகள் சைலஜா டீச்சருக்கு ஆதரவாக ஒன்று திரண்டு முதல்வரை எதிர்த்து வருகிறார்கள்.

கவுரி அம்மாள்
கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் கவுரி அம்மாளின் வளர்ச்சியை ஒடுக்க அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அது போல் இன்றைய தினம் சைலஜா உலகளவில் பேசப்பட்டதால் கட்சி விதிகளை காரணம் காட்டி அவரது வளர்ச்சி ஒடுக்கப்படுவதாகவே கேரள மக்கள் கருதுகிறார்கள்.

கட்சி விதிகள்
ஏற்கெனவே முதல்வராக இருந்த பினராயி விஜயனுக்கு மறுவாய்ப்பு கொடுக்கப்படும் போது சைலஜாவுக்கு ஏன் கொடுக்கக் கூடாது என்பது கேள்வியாக உள்ளது. கட்சிக்கு விதிகள் என்பது சரிதான். ஆனால் காலத்திற்கு சூழலுக்கு தகுந்தாற்போல் விதிகள் மாற்றியமைக்கப்படுவதில் தவறில்லையே என்கிறார்கள். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்சி விதிகளை ஏன் தளர்த்தக் கூடாது என்ற கேள்வி எழுகிறது.

பினராயி விஜயன்
கேரளாவை இதுவரை பெண்கள் ஆண்டதே இல்லை. பெண் தலைவர்கள் பெரிதாக உருவெடுக்கும்போது அவர்கள் களையறுக்கப்படுகிறார்கள். எனவே முதல்வர் பதவியை சைலஜா டீச்சருக்கு பினராயி விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பெண்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் என்றால் 3 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்ததை மேற்கோள் காட்டுகிறார்கள்.

திறமை
ஆனால் அவர்கள் மூவரும் சைலஜா டீச்சர் அளவுக்கு திறமையாக செயல்படுவார்களா என்பது போக போகத் தான் தெரியும் என்கிறார்கள் கேரள மக்கள். சுகாதாரத் துறை அமைச்சர் பதவி சைலஜாவுக்கு கொடுக்காததன் விளைவை விரைவில் கேரளா சந்திக்க போகிறது என திரைத்துறையினர், தொழிலதிபர்கள், பெண்ணியவாதிகள் உள்ளிட்டோர் கூறுகிறார்கள். மேலும் முதல்வர் பினராயிக்கு எதிராக பலர் தங்கள் கண்டனங்களை முன் வைத்து வருகிறார்கள்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications