Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராத்திரி 12 மணி வரை ஜாலி.. மனைவி தூங்கிய பிறகு பாம்பை ஏவி கொன்ற கணவர்.. நடுங்கும் கொல்லம்!!

மனைவி மீது பாம்பை ஏவி கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ராத்திரி 12 மணி வரை மனைவியிடம் ஜாலியாக சிரித்தபடியே பேசி கொண்டிருந்த கணவன், அவர் தூங்கியதும் பாம்பை ஏவி கடிக்க விட்டு கொன்றுள்ளார்.. மனைவியை கொலை செய்வதற்காகவே 10 ஆயிரத்துக்கு பாம்பை விலை கொடுத்து, ஒரு பையில் போட்டு வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார் கணவர்!!

Recommended Video

    பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த கணவன்

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா.. இவரது கணவன் சூரஜ்.. கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகிறது.. ஒரு வயதில் மகன் இருக்கிறான். பறக்கோடு பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த மாதம் மாதம் ஒருநாள் இரவு உத்ரா தூங்கி கொண்டிருந்தார்.. அப்போது அவரது காலில் திடீரென ஏதோ கடித்துவிடவும் அலறி எழுந்து சத்தம் போட்டார்.. இதை பார்த்து பதறிய கணவனும் உத்ராவை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்றார்.. அப்போதுதான், அணலி வகை பாம்பு ஒன்று உத்ராவை கடித்திருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள்.

    படுக்கையறை

    படுக்கையறை

    இதையடுத்து, திருவல்லாவில் ஒரு ஆஸ்பத்திரியில் 16 நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன்பிறகு வீட்டிற்கு திரும்பினார் உத்ரா. இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி தூங்கி கொண்டிருந்த மகளை எழுப்ப அவரது அம்மா ரூமுக்குள் வந்தார்.. அப்போது அசைவற்று படுக்கையில் கிடந்தார்.. வாயில் நுரை தள்ளியிருந்தது.. உடம்பெல்லாம் நீலகலரில் இருந்தது.. இந்த முறையும் உத்ராவை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்குமே இது அதிர்ச்சியை தந்தது.

    2 முறை பாம்பு

    2 முறை பாம்பு

    அது எப்படி ஒரே ரூமில் உத்ராவை 2 முறை பாம்பு கடிக்கும் என்று சந்தேகம் எழுந்தது.. "உத்ரா ரூம் 2-வது மாடியில் இருக்கிறது.. அது ஏசி ரூம்.. ஏசி இருப்பதால் ஜன்னல்கள் கூட திறக்க வாய்ப்பு இல்லை. உத்ராவை பாம்பு கடித்த 2 முறையும், சூரஜ்தான் அந்த ரூமில் படுத்திருந்திருக்கிறார்.. 2 பேரும் ஒரே ரூமில் படுத்திருந்தபோது, பாம்பு கடித்த அன்று விடிகாலை 5.30 மணிக்கே சூரஜ் எழுந்து வெளியே போய்விட்டார்..

    சந்தேகம்

    சந்தேகம்

    அவள் உயிர் அந்த ரூமிலேயே போயிடுச்சு.. அதுக்கப்பறம் டிரெஸ்ஸிங் ரூமில் அந்த பாம்பு இருந்தது. அது மூர்க்கன் வகை என்று சொல்கிறார்கள்.. கடித்த 2 பாம்புகளும் விஷம் இருக்கிற பாம்புதான்.. எப்படி ஒரே ரூமில் 2 முறை பாம்பு கடிக்கும், இதுதான் எங்கள் சந்தேகம்... முதல்முறை பாம்பு கடிக்கும்போதே, சூரஜ்தான் அந்தபாம்பை கையிலேயே பிடிச்சு ஒரு கோணிப்பையில் போட்டுட்டு வெளியே எடுத்துட்டு போனார்.. விஷ பாம்பை எப்படி அவர் அசால்ட்டா கையில் தூக்கிட்டு போக முடியும்னு அப்பவே எங்களுக்கு சந்தேகம் இருந்தது.

    100 சவரன் நகை

    100 சவரன் நகை

    உத்ரா கல்யாணத்துக்கு 100 சவரன் நகை போட்டோம், கார் தந்தோம், பணம் தந்தோம்.. இன்னும் நகை, பணம் வேணும் என்று சூரஜ் கேட்டு கொண்டிருப்பதாக உத்ரா அழுது எங்ககிட்ட சொல்லியிருக்கிறாள்.. அதனால் அவள் சாவில் உரிய விசாரணை வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்" என கண்ணீருடன் சொல்லியிருந்தனர்.. இது சம்பந்தமாக போலீசிலும் புகார் தந்தனர். இந்த புகாரின்பேரில் விசாரணை நடந்தது.. அப்போதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

    2வது முயற்சி

    2வது முயற்சி

    உத்ராவின் நகை மீதுதான் சூரஜ்-க்கு மொத்த கவனமும் இருந்துள்ளது. ஆவருக்கு தெரியாமல் பேங் லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து ஊதாரித்தனமாக செலவு செய்திருக்கிறார்.. இந்த விஷயம் உத்ராவுக்கு தெரிந்து சண்டை போட்டுள்ளார்.. இதுதான் இவர்களுக்குள் பிரச்சனையாக இருந்திருக்கிது. ஏற்கனவே ஒருமுறை மனைவியை கொல்ல முயன்றதும் இதற்காகத்தான். அந்த முயற்சி தோல்வி அடையவும், 2வது முறையாக ஒரு விஷ பாம்பை 10 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்துள்ளார்.

    விஷ பாம்பு

    விஷ பாம்பு

    சம்பவத்தன்று ஒரு பையில் போட்டுக் கொண்டு வீட்டில் போய் ஒரு மூலையில் வைத்துவிட்டார்.. அன்று இரவு 12 மணி வரை உத்ராவிடம் ஜாலியாக பேசி கொண்டிருந்திருக்கிறார்.. 12 மணிக்கு மேல் உத்ரா தூங்கிவிடவும், அதற்கு பிறகு பையில் உள்ள பாம்பை எடுத்து உத்ரா மீது ஏவி விட்டுள்ளார். பிறகு கதவை சாத்தி கொண்டு வெளியே சென்றுவிட்டார்.. இதற்கு பிறகுதான் பாம்பு உத்ராவை கடித்துள்ளது. இவ்வளவும் விசாரணைக்கு பிறகு தெரியவந்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+