சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு.. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கேரளாவில் முழு அடைப்பு.. சபரிமலை போராட்டத்தில் கலவரம்- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

    நேற்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்தனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தியா முழுக்க இந்த செய்தி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு பின் முதல்முறை 50 வயதிற்கும் குறைவான பெண்கள் இப்போதுதான் கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

    தரிசனம் செய்தனர்

    தரிசனம் செய்தனர்

    அதிகாலை 3.45க்கு கோவிலுக்குள் சென்றவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்தனர். இது வீடியோவாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கோவிலின் நடை அடைக்கப்பட்டது. கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததால் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு பின் மீண்டும் கோவில் திறக்கப்பட்டது.

    இன்று போராட்டம்

    இந்த நிலையில் சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வலதுசாரி அமைப்பினர் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் இதற்கு எதிராக இன்று போராட உள்ளனர்.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    ஆனால் போராட்டத்திற்கு மத்தியிலும் கேரளாவில் பேருந்துகள் ஓடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் கடைகள் அனைத்தும் இயங்கும் என்று வணிக சங்கங்கள் அறிவித்து இருக்கிறது. ஆனாலும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பும் கருதி தமிழக எல்லையிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

    போலீஸ் பாதுகாப்பு

    போலீஸ் பாதுகாப்பு

    இதனால் தற்போது கேரளா முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகும் வரை போராட்டம் நடக்கும் என்று சில இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+