சர்ச்சையான 'தி கேரளா ஸ்டோரி'.. 'பேக்' அடித்த படக்குழு! டிரைலரில் செஞ்ச மாற்றத்தை கவனிச்சீங்களா?
திருவனந்தபுரம்: தி கேரளா ஸ்டோரி என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் சமீபத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த ட்ரைலர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் தற்போது மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் மதச்சார்பின்மையை உறுதியாக கடைப்பிடிக்கும் மாநிலமாக கேரளா இருக்கிறது. இந்நிலையில் இந்த மாநிலம் குறித்து வெளிவர உள்ள படம்தான் தி கேரளா ஸ்டோரி. படத்திற்கு முன்னோட்டமாக வந்த ட்ரைலர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது, கேரளாவில் விடுதியில் தங்கி பயிலும் ஒரு இஸ்லாமிய மாணவி தன்னுடன் பயிலும் சக மாணவிகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார். அதன் பின்னர் அவர்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்துகொள்கிறார்கள்.

திருமணத்தையடுத்து சிரியாவுக்கு செல்லும் அவர்கள் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று ட்ரைலர் கூறுகிறது. இந்த திரைப்படம் மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த ட்ரைலர் குறித்து கண்டனம் தெரிவித்த கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், "மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருக்கிறது. சங்பரிவாரின் கொள்கையை பிரசாரம் செய்வதற்காக எடுக்கப்பட்டது படம்தான் இந்த 'தி கேரள ஸ்டோரி'.
கேரளாவில் காலூன்ற நினைக்கும் சங் பரிவார் கும்பல், தற்போது லவ் ஜிகாத் என்கிற விஷயத்தை கையில் எடுத்திருக்கிறது. ஆனால் நீதிமன்றம், விசாரணை அமைப்புகள், மத்திய உள்துறை அமைச்சகம் கூட லவ் ஜிகாத் என்று ஒன்று கிடையாது என நிராகரித்துள்ளது. ஆனால் இதனை பரப்ப இந்த திரைப்படத்தை சங் பரிவார் அமைப்புகள் பயன்படுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார். அதேபோல எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டபோது கீழே கொடுக்கப்பட்டிருந்த 'டிஸ்கிரிப்ஷனில்', "இந்த திரைப்படம் கேரளாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 ஆயிரம் பெண்களை பற்றிய உண்மை கதை" என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இது பெரும் விமர்சனத்தை பெற்றிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை 32 ஆயிரத்திலிருந்து வெறும் 3 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதாவது "இந்த திரைப்படம் கேரளாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 ஆயிரம் பெண்களை பற்றிய உண்மை கதை" என்று 'டிஸ்கிரிப்ஷன்' எடிட் செய்யப்பட்டுள்ளது.

இதனை ஸ்கிரீன்ஷாட்டாக எடுத்துள்ள சமூக செயற்பாட்டாளர்கள் அதனை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு கேள்வியெழுப்பி வருகின்றனர். அதாவது இந்த படம் முதலில் 32 ஆயிரம் பெண்களை பற்றியது என்ற சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை வெறும் 3ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல இந்த திரைப்படத்தின் போஸ்ட்டரில் 4 பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் திரைப்படம் மூன்று பெண்களை பற்றியது என்று கூறுகிறீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஏற்கெனவே இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இதனை தடை செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மறுபுறம் இந்த திரைப்படத்தில் 'உண்மை' சம்பவம் என்று குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை ஆதாரத்துடன் நிரூபித்தால் ரூ.1 கோடி வரை தருவதாக இஸ்லாமிய அமைப்புகள் கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications