பிரபல நடிகை அஞ்சலி நாயர் தந்த இன்ப அதிர்ச்சி.. "ஆசீர்வதியுங்களேன்".. குவிந்துபோன வாழ்த்துக்கள்
பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகை அஞ்சலி நாயருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
திருவனந்தபுரம்: பிரபல நடிகை அஞ்சலி நாயருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து, கேரளா மற்றும் தமிழ் சினிமா உலகினர் திரண்டு வந்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
மலையாள திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகையாக இருப்பவர்... சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதும் பெற்றவர் அஞ்சலி நாயர்.
தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நெல்லு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.. பிறகு கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும், நீ நான் நிழல், கிருஷ்ணம் போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார்..

திர்ஷ்யம் - மோகன்லால்
ஆனால், இந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால், மலையாள திரையுலகுக்கு சென்றார்.. அங்கு இவர் நடித்த படங்கள் அத்தனையும் தொடர்ந்து வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன... மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார்... அதிலும், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி வெற்றிபெற்ற திரிஷ்யம் 2 (drishyam 2) படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து, கேரள மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் அஞ்சலி நாயர்.

ரகசிய திருமணம்
இதையடுத்து, விஜய் சேதுபதியின் மாமனிதன், ரஜினியின் அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் அஞ்சலி நாயர்... ஒருகட்டத்தில் தமிழ், மலையாளம் சினிமாவில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் அஞ்சலி.. இவர் பிசியாக நடித்து கொண்டிருந்தபோதே, திடீரென அஜித் ராஜு என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்... அஜித் ராஜு சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்...

கர்ப்பிணி
அஞ்சலிக்கு கடந்த 2011-ம் ஆண்டு அனீஷ் என்ற டைரக்டருடன் திருமணம் நடந்தது.. 10 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பிறகு கருத்து வேறுபாடு காரணமாக, 2016-ல் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.. தனிமையில் அஞ்சலி வாழ்ந்து வந்தபோதுதான், இரண்டாவது திருமணம் செய்தார்.. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலி நாயருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது... தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில், குழந்தை மற்றும் அஜித் ராஜூவுடன் இருக்கும் போட்டோவை அஞ்சலி நாயர் ஷேர் செய்துள்ளார்.

ஆசீர்வாதம்
அத்துடன், "எங்கள் புதிய குடும்ப உறுப்பினர்.. இனிமையான பெண் குழந்தையை போலவே, வாழ்க்கையும் அற்புதங்கள் நிறைந்தது. உங்கள் அனைவரின் ஆசியும் தேவை" என்று தெரிவித்துள்ளார்... இதையடுத்து ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.. கியூட் குழந்தையுடன், போஸ் தரும் இந்த இளம்பெற்றோர்களின் போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications