Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவில் அதிசயம்.. தந்தை விற்ற லாட்டரி சீட்டு.. மகளுக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழா அருகே தந்தை விற்பனை செய்த லாட்டரியில் மகளுக்கு முதல் பரிசாக ரூ.75 லட்சம் விழுந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ஷ்டம் யார் யாருக்கு எப்படி வரும் என்று தெரியாது. இங்கு தந்தை வழியாக மகளுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

லாட்டரியில் அடிக்கடி அதிர்ஷ்டம் அடித்தது பற்றி கேள்விபட்டிருப்போம். கூலித்தொழிலாளிக்கு ஒரு கோடி பரிசு விழுந்தது. ரிக்ஷா ஒட்டுநருக்கு பல லட்சம் பரிசு விழுந்தது. கடன் வாங்கிய காசில் வாங்கிய லாட்டரிக்கு கோடியில் பரிசு விழுந்தது என்று பல முறை கேள்விபட்டிருப்போம்.

இவை எல்லாம் கேரளாவில் நடந்த வருகிறது. கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு தடை இல்லை. கேரளாவில் வாரத்தில் ஏழு நாளுமே லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டு வருகிறது.

இது தவிர ஓணம் பம்பர், விஷூ பம்பர், கிறிஸ்துமஸ் பம்பர் என அதிக தொகைக்கான பம்பர் லாட்டரி குலுக்கலும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், தந்தை விற்பனை செய்த லாட்டரி சீட்டில் மகளுக்கு முதல் பரிசு ரூ.75 லட்சம் பரிசு விழுந்துள்ளது. இந்த அதிசயம் கேரளாவின் ஆலப்புழாவில் நடந்துள்ளது.

The first prize of Rs 75 lakh fell to the daughter in the lottery sold by the father in Kerala

யார் அவர்கள், எப்படி பரிசு விழுந்தது என்பதை பார்ப்போம். ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே நெட்டோசேரி பகுதியை சேர்ந்த 64 வயதாகும் என்.ஜே.அகஸ்டின், நீண்ட நாட்களாக லாட்டரி சீட்டு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் தனது ஊரில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி கடை நடத்தி வந்த போதிலும் இதுவரையில் அவருக்கு பரிசு விழுந்தது இல்லை. இந்த நிலையில் செவ்வாய் கிழமை அன்று ஸ்ரீ சக்தி லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இந்த குலுக்கலில் முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும்.

குலுக்கலில் முதல் பரிசு அகஸ்டின் கடையில் விற்ற சீட்டிற்கு கிடைத்த விவரம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிர்ஷ்டசாலியை தேடி வந்தார்கள்.

அப்போது அகஸ்டினின் மகள் ஆஷ்லி (24) என்பவருக்கு விற்ற சீட்டிற்கு முதல் பரிசு ரூ.75 லட்சம் விழுந்த தெரிய வந்தது. பின்னர் அவர் லாட்டரி சீட்டை ஆலப்புழாவில் உள்ள தனியார் வங்கியில் டெபாசிட் செய்தார். இதனால் அகஸ்டினும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த குலுக்கலில் 2-ம் பரிசாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. தந்தையின் லாட்டரி கடையில் வாங்கிய சீட்டுக்கு மகளுக்கு முதல் பரிசு கிடைத்தது ஆலப்புழா பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+