Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே ஒரு "மாட்டுக்கறி" சீன்.. டோட்டல் படமும் க்ளோஸ்.. கேரளா ஸ்டோரிஸை கிழித்து எடுக்கும் மலையாளிகள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா ஸ்டோரிஸ் படத்தின் இரண்டாவது பாகம் இந்த மாதம் இறுதியில் வெளியாகவுள்ள நிலையில், அதன் டிரைலரில் மாட்டிறைச்சி தொடர்பாக இடம்பெற்றிருந்த ஒரு காட்சி இணையத்தில் பெரியளவில் சர்ச்சையானது. மலையாளிகள் அந்த குறிப்பிட்ட காட்சிக்குச் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேரளா ஸ்டோரிஸ். கட்டாய மதமாற்றம் தொடர்பான படம் எனச் சொல்லி இந்தப் படத்தை எடுத்திருந்தனர். இந்தப் படம் முதலில் வெளியானபோதே கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது. எந்தவொரு ஆய்வும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் என அப்போதே விமர்சனங்கள் எழுந்தன.

The Kerala Story Controversy Malayalis Roast The Kerala Story 2 Trailer with Beef-Porotta Memes

தி கேரளா ஸ்டோரி 2

இதற்கிடையே இதன் இரண்டாவது பாகம் 'தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் பிப்ரவரி 27ம் தேதி வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், சில மணிநேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, மலையாளிகள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சர்ச்சை

டிரெய்லரில் ஒரு சீனில் சிறைபிடிக்கப்பட்டது போலக் காட்சிப்படுத்தப்பட்ட பெண் ஒருவரிடம் சாப்பிட மாட்டிறைச்சி கொடுக்கிறார்கள். ஆனால், அதைச் சாப்பிட மறுத்த அந்தப் பெண், தட்டை உதைத்து, "பட்டினி கிடந்து சாவேனே தவிர, மாட்டிறைச்சி சாப்பிட மாட்டேன்" எனச் சொல்கிறார். பிறகு, சிலர் அவரை கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சியைத் தருவது போலக் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த குறிப்பிட்ட சீன் தான் இணையத்தில் பேசுபொருளானது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர். குறிப்பாக மலையாள மக்கள் இதைக் கடுமையாக விமர்சித்தனர். மாட்டிறைச்சி ஒன்றும் தடை செய்யப்பட்ட உணவு இல்லை என்றும் அது கேரளாவில் விரும்பி சாப்பிடப்படும் உணவு என்பதைக் காட்டும் வகையில் பெண்கள் பலரும் தாங்கள் மாட்டிறைச்சி சாப்பிடும் வீடியோக்களையும் படங்களையும் பதிவிட்டனர்.

நெட்டிசன்கள் பாய்ச்சல்

இந்தப் படம் குறித்த மீம்ஸ்களும் கூட இணையத்தில் பறந்தன. உண்மையான கள நிலவரத்தைப் புரிந்து கொள்ளாமல் அல்லது வேண்டும் என்றே அதைப் புறக்கணித்துவிட்டு, இதுபோன்ற காட்சிகளை அமைத்துள்ளதாக நெட்டிசன்கள் சாடினர். இதற்குப் பதிலடியாகக் கோதா, பிரேமம், ஹிருதயம் போன்ற மலையாளப் படங்களில் ஹீரோயின்கள் விரும்பி மாட்டிறைச்சி சாப்பிடும் வீடியோக்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், மற்றொரு பதிவில் இந்த டிரைலர் வந்த பிறகு கேரளாவில் கேரளாவில் மாட்டிறைச்சி விற்பனை அதிகரித்துவிட்டதாகவும் இதனால் விலை எக்குத்தப்பாக எகிறிவிட்டதாகவும் நக்கலட்டித்து வருகிறார்கள்.

அதேபோல இந்தக் காட்சியை ஏஐ மூலம் மாற்றியும் வெளியிட்டு உள்ளனர். அதில் அந்த நடிகர்களே காட்சியை விமர்சிக்கும் வகையிலான வசனங்களைச் சேர்ந்துள்ளனர். மலையாளப் பெண்களைப் பற்றி தெரியாதவர்கள் எடுத்த வீடியோ என்று அந்த நடிகர்களே சொல்லும் வகையில் ஏஐ மூலம் காட்சியை மாற்றி அமைத்திருந்தனர். பிறகு அனைவரும் சேர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடுவது போல அதை முடித்தனர். இதுபோல பல கருத்துகளைப் பார்க்க முடிந்தது. இப்படம் வெளியாகும் போதும் அது பெரிய சர்ச்சையைக் கிளப்பும் என்றே தெரிகிறது.

கேரளா முதல்வர்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இந்த படத்தை விமர்சித்துள்ளார். இந்தப் படம் மாநிலத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு அச்சுறுத்தல் என்று சாடினார். இந்த படம் கேரளாவின் மத நல்லிணக்க மரபிற்கு எதிரானது என்று சாடினார். இந்தப் படத்தின் முதல் பாகத்தைக் குறிப்பிட்ட அவர், "மாநிலத்திற்கு எதிராக வெறுப்பைப் பரப்பவும், மதச்சார்பற்ற பாரம்பரியத்தை அச்சுறுத்தவும் நோக்கம் கொண்டது.

பொய்கள், வெறுப்பு மற்றும் கேரளாவிற்கு எதிரான பிரச்சாரங்களால் நிறைந்த முதல் பாகம் மத ரீதியாகப் பிளவு படுத்தவே உருவானது என்பதை இந்த நாடு உணர்ந்தது.. கட்டாய மதமாற்றச் சம்பவங்களைச் சித்தரிப்பதாகக் கூறப்படும் இரண்டாவது பாகமும், அதுபோலத் தான் உள்ளது" என்று சாடியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+