'தி கேரளா ஸ்டோரி' சர்ச்சை.. ஆதாரத்தை கொண்டுவந்தால் ரூ.1 கோடி பரிசு.. கேரள முஸ்லீம் லீக் சவால்
திருவனந்தபுரம்: 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரைலரில் சொல்லப்பட்டது போல், உண்மை என யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என கேரள மாநில முஸ்லீம் யூத் லீக் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. கேரளாவை ஆளும் கம்யூனிஸ்டுகளும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்த்துள்ளன. இந்த படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று போர்க்கொடி உயர்ந்துள்ளது.
பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணாய் பச்செளரி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சில மாதம் முன்பு வெளியானது.

'தி கேரளா ஸ்டோரி' படத்தின் டீசரில் கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யபடுவதாகவும், அப்படியே அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் காட்சிகள் இருந்தது. இதற்கு அப்போதே சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படத்தின் ட்ரைலரில் 3 மாற்று மத பெண்களும், ஒரு இஸ்லாமிய பெண்ணும் கல்லூரியில் நண்பர்களாகிறார்கள். அந்த இஸ்லாமிய பெண்ணின் உதவியோடு மீதம் இருக்கும் பெண்களை மதமாற்ற செய்யும்படி செய்கிறார்கள்.
அதற்கேற்றாற்போல் ஒரு சூழலை உருவாக்கி நம்மை இவரால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று அந்த பெண்களை நம்பவைத்து ஹிஜாப் அணியவைத்து அப்படியே மதம் மாற்றம் செய்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வைத்து, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு ISIS அமைப்பில் இணைத்து விடுகிறார்கள். இப்படியாக 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரெய்லர் காணப்படுகிறது.

மேலும் இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் அந்த ட்ரைலரில் காண்பிக்கப்படுகிறது.
இதுதான் கேரளாவில் கொந்தளிப்பு ஏற்பட காரணமாகி உள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், மதவாதம் இல்லாத கேரளாவில் இது போல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறி மதக் கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். மேலும் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்கள். இந்தி படமான 'தி கேரளா ஸ்டோரி' படம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 4 மொழிகளில் வரும் மே 5-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
கேரள மாநில காங்கிரஸ் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் கூறுகையில், 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக இப்படம் சொல்கிறது. படத்தில் என்ன இருக்கப் போகிறது என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. கேரள மாநிலத்தின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக 'தி கேரளா ஸ்டோரி' இந்தி படத்தின் ட்ரெய்லர் அமைந்திருக்கிறது. சங் பரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இது என்பதை, ட்ரெய்லரை பார்க்கும் போது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது" என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த சூழலில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரைலரில் சொல்லப்பட்டது போல், உண்மை என யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என கேரள மாநில முஸ்லீம் யூத் லீக் அறிவித்துள்ளது.
இதுபற்றி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முஸ்லீம் யூத் லீக்கின் பொது செயலாளர் பி.கே.பிரோஸ், "சங்பரிவார் தொழிற்சாலையில் அரசியல் நோக்கத்திற்காக பொய் மட்டுமே சொல்லும் மிகப்பெரிய பொய்களில் ஒன்று லவ் ஜிஹாத் மூலம் சிரியாவுக்கு மதமாற்றம் செய்த குற்றச்சாட்டு. சங் ஸ்பான்சர் படம் கேரளாவில் 32000 பேரை இடம் மாற்றம் செய்ததாக கூறினால், சராசரியாக ஒரு பஞ்சாயத்துல 30 பேராவது இருப்பார்கள்.
ஆனால் ஒருவரின் அட்ரஸ் கேட்டால், எதையும் கேட்காத மாதிரி தலை குனிந்து உட்கார்ந்து கொள்வீர்கள். எனவே ஆதாரத்தை கொண்டு வருபவர்களுக்கு முஸ்லிம் யூத் லீக் ஒரு கோடி பரிசு வழங்கும். முஸ்லிம் யூத் லீக்கின் மாவட்ட மையங்களில் உள்ள கவுண்டர்களில் சான்று வைத்திருப்பவர்கள் தயங்காமல் ஒரு கோடி வாங்கலாம்." என்று கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications