நிபா வைரஸின் இரண்டாவது அலைக்கு வாய்ப்பா? கேரளாவின் நிலைமை என்ன! ஆய்வாளர்களின் விளக்கம் இதுதான்
திருவனந்தபுரம்: கேரளாவை நிபா வைரஸ் அச்சுறுத்தல் ஆட்கொண்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது என்றும், ஆனால் இந்த வைரஸின் இரண்டாவது அலை வர வாய்ப்பிருக்கிறது என்றும் மாநில அரசு எச்சரித்துள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் அப்போது சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் மேலெழுந்திருக்கிறது. கேரளாவை சேர்ந்த இருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி உயிரிழந்தனர். இவர்கள் மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர்.

அதேபோல இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சிலரும் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அறிகுறிகள் இருந்துள்ளன. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி உயிரிழந்தவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த 12ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்தார்.
கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் தீவி்ரமாக பரவி வரும் நிலையில் நிபா வைரஸ் குறித்த இந்த அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல இவர்களுடன் தொடர்பில் இருந்த 789 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அதேபோல மத்திய அரசின் சார்பில் வைரஸ் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யும் குழு ஒன்று கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுண்ணுயிரியலாளர் மால சாப்ரா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய துணை இயக்குநர் ஹிமான்ஷூ சௌஹான் என பல்துறை வல்லுநர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு குறித்து மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று பேட்டியளித்தார். அதில், "இந்த வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. ஆனால் இந்த வைரஸின் இரண்டாவது அலை வர வாய்ப்பிருக்கிறது" என்று கூறியுள்ளார். அதாவது, "நிபா வைரஸ் முழுமையாக தடுக்கப்பட்டுவிட்டது என்று கூறிவிட முடியாது. ஆனால் தொற்று பாதிப்பு பரவாமல் இருக்கிறது. இது நிம்மதியளிக்கக்கூடடியதாக இருக்கிறது.
முன்னதாக இந்த வைரஸ் தொடர்பாக ஆய்வாளர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், நிபா வைரஸ் இரண்டாவது அலை வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு, ஆனால் அதை முழுமையாக நிராகரித்துவிட முடியாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே நம்முடைய மாநில சுகாதார அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் தொற்று பாதிப்பு அடையாளம் காணப்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது.
அதேபோல கோழிக்கோட்டில் மட்டும் ஏன் நிபா வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவுகிறது என்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐசிஎம்ஆர்) தெளிவான விளக்கம் அளிக்க முடியவில்லை" என்று பினராயி விஜயன் கூறியுள்ளார். தற்போது கேரளாவில் பரவியுள்ள நிபா வைரஸ் வங்கதேசத்தின் நிபா வைரஸுடன் ஒத்து போனாலும், அதிலிருந்து சில மாற்றங்களை கொண்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கால நிலை மாற்றம் காரணமாக கூட புதிய திரிபு வைரஸ் உருவாகியிருக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications