"விஐபி" யார்?.. அழகிகளை விரட்டி கொண்டு வந்த "ஆடி கார்".. திட்டமிட்ட கொலையா.. திடீர் ட்விஸ்ட்
கேரள முன்னாள் அழகியின் விபத்து தொடர்பான திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: கேரள மாடல்கள் 2 பேர் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே கேரள அழகிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
2019ம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர்... இதே அழகி போட்டியில் 2வது இடத்தை பிடித்தவர் அஞ்சனா ஷாஜன்.. இவர்கள் 2 பேருமே நெருங்கிய தோழிகள்..
இந்நிலையில், அன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் மற்றும் அவர்களின் நண்பர்கள் முஹம்மது ஆசிக் ஆகியோர் நவம்பர் மாதம் 1-ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் பாலாரிவட்டத்திலிருந்து இடப்பள்ளி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.

கட்டுப்பாடு
அப்போது இவர்களின் கார் முன்னாடி ஒரு பைக் சென்று கொண்டிருக்கவும், அதன்மீது மோதிவிடாமல் இருக்க, காரை திருப்ப வேண்டியதாயிற்று.. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ரோட்டில் ஓடி, சாலையோரம் இருந்த மரத்தில் பலமாக மோதியது... இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி அதில் இருந்த அன்சி கபீர், அஞ்சனா ஷாஜன் இருவருமே உடல் நசுங்கி அங்கேயே உயிரிழந்தனர். டிரைவர் உட்பட 2 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு, எர்ணாகுளம் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டனர்

சிகிச்சை
ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த முஹம்மது ஆஷிக் கடந்த 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்துல் ரஹ்மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து, அவர் ஓரளவு உடல்நலம் தேறியதையடுத்து அவரிடம் விசாரணையை நடத்தப்பட்டது.. நடத்தினர்.. அப்போதுதான் அப்துல் ரஹ்மான் போதையில் கார் ஓட்டியது தெரியவந்தது... அதுமட்டுமல்ல, கொச்சியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் 31-ம் தேதி இரவு டிஜே பார்ட்டியில் இவர்கள் அனைவருமே கலந்துகொண்டதாக அப்துல் கூறினார்.

காட்சி
எனவே, அந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.. அதில் 4 பேருமே ஹோட்டலுக்கு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததே தவிர, ஹாலில் பதிவான காட்சிகள் மட்டும் அதில் அழிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த விசாரணையை முடுக்கிவிட்டதையடுத்து, அந்த ஹோட்டல்ஓனர் ராய் ஜோசப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது.. இவர் கொச்சியை சேர்ந்தவர்.. நம்பர்.18 என்ற பெரில் அந்த ஹோட்டலை நடத்தி வருகிறார். விசாரணையின் போது ஹோட்டலின் 2 வீடியோ ஆதாரங்களை தந்துள்ளார். ஆனால் அவைகளிலும் முக்கிய காட்சிகள் அழிக்கப்பட்டே இருந்தது.

விசாரணைகள்
சிசிடிவி பதிவுகளை அழித்த குற்றத்திற்காக ஓனருடன் சேர்த்து 5 ஓட்டல் ஊழியர்களையும் பாலரிவட்டம் போலீசார் கைது செய்துள்ளனர்.. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.. இது கார் விபத்தே அல்ல, அழகிகள் திட்டமிட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். காரணம், ஹோட்டலை விட்டு மாடல் அழகிகள் காரில் கிளம்பி செல்லும்போது, இவர்களின் பின்னாடியே மற்றொரு ஆடி கார் துரத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

விபத்து
குந்தானூர் என்ற இடத்தில் இருந்து, ஆடிகார் இவர்களின் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கார் அப்பளம் போல் நொறுங்கியதுமே, ஆடி காரில் இறங்கி ஷைஜூ என்பவர் இறங்கி பார்த்துவிட்டு சென்றாராம்.. இந்த விஷயம் தெரிந்து போலீசார் தன்னை கைது செய்யக்கூடுமோ என்று நினைத்து, ஷைஜு முன்ஜாமீன் கேட்டுள்ளாராம். ஷைஜூ யார் என்று தெரியவில்லை.. இவர்கள் ஏன் அழகிகளை துரத்தினார்கள் என்றும் தெரியவில்லை.. ஆனால், இதில் முக்கிய நபர் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மரணம்
இப்படித்தான் பிரிட்டன் இளவரசி டயானாவும் மரணமடைந்தார்.. அவரையும் பின்னாலேயே ஒரு கார் துரத்தி சென்று கொன்றதாக கூறப்பட்டது.. இதுவரை அந்த மர்ம முடிச்சி அவிழாவிட்டாலும், இந்த கேரள மாடல் அழகிகளின் மரணத்திலாவது உண்மை தெரியவருமா என்று பார்ப்போம்.. இத்தனை நாளும் விபத்து என்று நம்பப்பட்டிருந்த நிலையில், அழகிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கேரள மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications