வயநாடு பேரணியில் விபத்து.. காயம்பட்ட செய்தியாளர்கள்.. பதறி அடித்து ஓடி வந்து காப்பாற்றிய ராகுல்!
வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்த பிரச்சாரத்தில் சிறிய விபத்து ஏற்பட்டு மூன்று பத்திரிக்கையாளர்கள் காயம் அடைந்து இருக்கிறார்கள்.
Recommended Video

திருவனந்தபுரம்: வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்த பிரச்சாரத்தில் சிறிய விபத்து ஏற்பட்டு மூன்று பத்திரிக்கையாளர்கள் காயம் அடைந்து இருக்கிறார்கள்.
இவர்களை ராகுல் காந்தி உடனடியாக காப்பாற்றி ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
|
பேரணி
இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வயநாட்டில் பிரச்சார பேரணி மேற்கொண்டார். இதை காண பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது. அப்போது அந்த பகுதியில் கூட்ட நெரிசல் காரணமாக சிறிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

செய்தி சேகரிப்பு
ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் சாலை தடுப்பிற்கு அருகே நின்று கொண்டு இருந்தார்கள். அப்போது அந்த சாலை தடுப்பு கீழே விழுந்து செய்தியாளர்கள் அதில் சிக்கினார்கள். கூட்ட நெரிசல் காரணமாக அந்த செய்தியாளர்களுக்கு கொஞ்சம் மோசமாக காயம் ஏற்பட்டது.

எத்தனை பேர்
மொத்தம் 3 செய்தியாளர்களுக்கு இதில் காயம் ஏற்பட்டது. அப்போது சரியாக அங்கு ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் ராகுல் காந்தி தனது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி வந்தார்.

என்ன வேகம்
வேகமாக அந்த செய்தியார்களை தூக்கி அருகே இருந்த ஆம்புலன்சில் ஏற்றினார். எல்லா செய்தியாளர்களையும் வரிசையாக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார். தற்போது இந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications