குலுங்கிய பேருந்து.. நள்ளிரவில் போலீசையே திணறவைத்த 3 பெண்கள்.. தீயாய் பரவும் வீடியோ.. என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: நள்ளிரவில் பேருந்தில் ரகளை செய்த மூன்று பெண்களால் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தபோது நள்ளிரவு 1 மணி அளவில் கல்லம்பலம் பகுதியில் நிறுத்தப்பட்டது.
அப்போது பேருந்தில் மூன்று பெண்கள் ,ஒரு ஆண் நண்பருடன் ஏறி உள்ளனர்.

மூன்று பெண்கள்
இதில் அந்த பெண்கள் போதையில் இருந்ததாக பேருந்தில் பயணித்த சக பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். பேருந்தில் ஏறிய உடனே சீட் இல்லை என பேருந்தில் இருந்தவர்களிடம் மூன்று பெண்களும் தகராறு செய்ய தொடங்கி உள்ளனர். பேருந்தில் இருந்த ஆண்கள் சிலரை எழுந்திரிக்கும்படி தொல்லை செய்துள்ளனர். எழுந்திரிக்க மறுத்த ஆண்களை, தகாத வார்த்தைகளால் அவர்கள் திட்டியுள்ளனர்.

மோசமான வார்த்தை
இதை பற்றி விசாரிக்க வந்த பேருந்து நடத்துனரையும் மோசமான வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இவர்களால் இரவில் தூங்கிக்கொண்டு இருந்த பேருந்து பயணிகள் எல்லோரும் தூக்கம் கலைந்து எழுந்துள்ளனர். நடத்துனர் எவ்வளவு சமாதானம் செய்தும் தொடர்ந்து சீட் கேட்டு பிற பயணிகளை மிரட்டும் வகையில் பேசி உள்ளனர். தொடர்ந்து இவர்களது ரகளை தாங்க முடியாமல் பேருந்தின் ஒட்டுனர் ஆற்றிங்கல், காவல் நிலையத்தில் பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.

விசாரித்தனர்
4 போரையும் போலீசார் விசாரிக்க துவங்கியதும் மூன்று பெண்களும் சேர்ந்து தகாத வார்த்தையில் திட்ட தொடங்கி உள்ளனர். அதோடு பஸ்ஸில் பயணம் செய்தவர்களை காவல் நிலையத்தில் இருந்து கொண்டே கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டியுள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. தப்பா கேஸ் கொடுத்துடுவேன் என்றும் கூறி நடத்துனரை மிரட்டி உள்ளனர்.

பொறுமை இழந்த போலீஸ்
பொறுமை இழந்த போலீசார் மூன்று பேரையும் பிடித்து உட்கார வைத்து விசாரித்தனர். இவர்கள் மீது மோசமாக மது வாடை அடித்ததாக கூறப்படுகிறது. மது மட்டுமின்றி இவர்கள் போதை பொருட்கள் எதாவது பயன்படுத்தி உள்ளனரா என மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். இதன் பின்பு இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களது வீட்டாருக்கும் தகவல் தெரிவித்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications