அத்தனை ஹெவியான பெட்டியை தூக்கி கொண்டு போன.. சுடிதார் போட்ட பெண்.. கிட்ட போய் பார்த்தா!
வாக்கு பெட்டியை தூக்கி செல்ல திரிச்சூர் கலெக்டர் அனுபமா உதவியுள்ளார்.
Recommended Video
திருவனந்தபுரம்: பச்சை கலர் சுடிதார், பிங்க் கலர் பேன்ட் அணிந்த பெண் ஒருவர் பெட்டி தூக்கி கொண்டு போவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் எல்லோரும் பதறி போய்விட்டனர்! நாட்டு மக்களின் ராயல் சல்யூட் இப்போது அவருக்குதான் சென்று கொண்டு இருக்கிறது!
நாளைக்கு கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் 3-ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அனைத்து வேலைகளும் அங்கு மும்முரமாக நடந்து வருகிறது.
இப்படித்தான் திரிச்சூர் மாவட்டத்திலும் வாக்கு பதிவு மையங்களில் ஆயத்த பணிகள் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகளும் போலீசாரும் ஏராளமானோர் ஈடுபட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரியிலிருந்து பூத்தில் பாதுகாப்புடன் இறக்கி வைத்து கொண்டிருந்தார்கள்.

அனுபமா
இந்த பணிகளை மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அனுபமா பக்கத்தில் நின்று கொண்டு கவனித்து கொண்டே இருந்தார். லாரிக்குள் இருந்து பெட்டியை இறக்கி தருகிறார்கள்.. ஆனால் அதை வாங்கி பூத்துக்குள் கொண்டு செல்ல ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் நின்றிருந்தார். இன்னொருவர் வந்தால்தான் பெட்டியை தூக்க முடியும். அதற்காக அவர் காத்து கொண்டிருந்தார்.

போலீஸ்காரர்
இதை பார்த்ததும் அனுபமா, கொஞ்சமும் யோசிக்காமல், பெட்டியை வாங்குவதற்கு லாரிக்கு பக்கத்தில் போய் நின்றுகொண்டார். அதாவது ஒரே ஒருவரால் பெட்டியை தூக்க முடியாது என்பதால் கை கொடுத்து அந்த போலீஸ்காரருக்கு உதவ முயன்றார்.

பதறிய அதிகாரிகள்
உடனே உள்ளிருந்து பெட்டி எடுத்து தரப்பட்டது. அதனை அனுபமாவும் அந்த போலீஸ்காரரும் தூக்கி கொண்டு உள்ளே போனார்கள். கலெக்டர் இப்படி திடீரென பெட்டியை தூக்குவதை பார்த்ததும் அங்கிருந்த மற்ற அதிகாரிகள் பதறி போய் விட்டனர். அலறியடித்து கொண்டு அருகில் ஓடிவந்தார்கள்.
குவியும் வாழ்த்துகள்
ஆனால், அவர்களை கையால் சைகை செய்து தடுத்து நிறுத்திவிட்டு, தானே பெட்டியை தூக்கி கொண்டு போனார். இது வீடியோவாக இணையத்தில் செம ஹிட்டடிக்க ஆரம்பித்தது. "இளம் அதிகாரிக்கு வாழ்த்துகள்", "இளம் அதிகாரிகள் சிலர் ஜனநாயகம் உயிர்ப்புடன்தான் இருக்கிறது".. என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். கூடவே வீடியோவை ஷேர் செய்தும் வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications