முதலில் தமிழ் கத்துக்கோங்க! அப்புறம் இந்தி பற்றி பேசலாம்.. கேரளா ரசிகர்களுக்கு பாடமெடுத்த கமல்
திருவனந்தபுரம்: ‛‛முதலில் தமிழ் கத்துக்கோங்க.. பிறகு இந்தி கற்றுக்கொள்வது பற்றி பேசுவோம். நாம் அனைவரும் திராவிடர்கள். ஒரே குடும்பம்'' என்று தக் லைஃப் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசினார்.
இயக்குநர் மணி ரத்னம் இயக்கி உள்ள திரைப்படம் ‛தக் லைஃப்'.. நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், நாசர் உள்பட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த தக் லைஃப் திரைப்படம் என்பது சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோரை மீண்டும் இணைத்துள்ளது. இவர்கள் 2 பேரும் கடந்த 1987 ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்தில் சேர்ந்து பணியாற்றி இருந்தனர். அதன்பிறகு தக் லைஃப் திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக பணியாற்றி உள்ளனர்.
இதனால் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது படத்தின் புரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் நடந்தது. கொச்சியில் உள்ள பிவிஆர் ஃபோரம் மாலில் நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் திரைப்படம் குறித்து தமிழ் மொழியில் பேசினார்.
அப்போது கமல்ஹாசன் பேசும்போது கூறியதாவது: "முதலில், நீங்கள் உங்கள் பக்கத்து மாநிலத்தின் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு இந்தி கற்றுக்கொள்வது பற்றி பேசுவோம். நாம் அனைவரும் திராவிடர்கள். ஒரே குடும்பம். தமிழ்நாட்டில் மலையாளத்தில் பேசலாம். ஆனால் நீங்கள் நீண்ட நேரம் பேசினால் அதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஆனால் கேரளாவில் தமிழில் பேசினால், மக்கள் அதைப் புரிந்து கொள்வார்கள்.
நமது மொழி மறைந்து விடாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு. இந்த மாநிலத்தில் இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவதற்கு எவ்வளவு துணிச்சல் (தைரியம்) தேவை என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் அனைவரும் திராவிடர்கள். அந்த பெருமையுடன், தக் லைஃப் ஆதரவு கொடுங்கள். நமஸ்காரம்'' என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications