ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் சட்டசபைத் தேர்தலுக்கு ரெடியாகும் சூழலில், அங்குக் கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக புதிய சர்வே வெளியாகியுள்ளது. அதில் ஆளும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் என இரு கூட்டணியுமே பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறாது எனச் சொல்லப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு நல்ல செய்தியும் இருக்கிறது. இந்த சர்வே குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

சில வாரங்களில் கேரளாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அரசியல் களத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது. அங்கு இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் தான் பிரதானமாகக் களத்தில் இருக்கிறது. இரு தரப்புமே மிகத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இதற்கிடையே மாத்ருபூமி நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்புகள் இப்போது வெளியாகியுள்ளது.

Tight contest in Kerala No majority for LDF and UDF But BJP is the gainer says news Pre-Poll survey

கேரளாவில் கடும் போட்டி

அதில் ஆளும் இடதுசாரி ஜனநாயக (LDF) முன்னணிக்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக (UDF) முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் கடுமையான போட்டி நிலவும் சூழலில், ஒரு சில தொகுதிகளோ அல்லது சில ஆயிரம் வாக்குகளோ வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட சரி சமம்

140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபையில், ஆட்சியை அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணி 71 இடங்களில் வெல்ல வேண்டும். தற்போதுள்ள சூழலில் இரு கட்சிகளுமே இந்த எண்ணிக்கையைத் தொடாது என மாத்ருபூமி சர்வே தெரிவித்துள்ளது.. ஆளும் LDF சுமார் 66 இடங்களையும், எதிர்க்கட்சியான UDF சுமார் 62 இடங்களையும் வெல்லக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட 12 தொகுதிகளை கடும் போட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஆளும் LDF கூட்டணிக்கு சர்வேயில் சற்று முன்னிலை இருந்தாலும், எதிர்க்கட்சி கூட்டணியின் ஆதரவு அலை தொடர்ந்து அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. தற்போதைய சட்டமன்ற பலத்துடன் ஒப்பிடுகையில் இடதுசாரிகள் 32 முதல் 36 இடங்கள் வரை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. மறுபுறம், காங்கிரஸ் கூட்டணி 20 இடங்கள் வரை கூடுதலாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியம் வாரியாக

பிராந்தியம் வாரியாக கேரள மக்கள் மனநிலை மாறுவதையே சர்வே காட்டுகிறது. உதாரணமாக வடக்கு கேரளாவில், இடதுசாரிகளுக்குச் சற்று முன்னிலை இருக்கிறது. அங்கு இடதுசாரி கூட்டணிக்கு 28 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 26 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.. ஆனால், மத்திய கேரளாவில் இந்த நிலைமை மாறுகிறது. இங்குக் காங்கிரஸ் கூட்டணி சுமார் 27 இடங்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. LDFக்கு இந்த பிராந்தியத்தில் சுமார் 21 இடங்கள் கிடைக்கலாம். தென் கேரளாவில், ஆளும் கூட்டணிக்கு 20 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 15 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிகிறது.

பாஜகவின் வளர்ச்சி

இந்த சர்வேயில் கேரளாவில் என்டிஏவின் வளர்ச்சியையும் பார்க்க முடிகிறது. பா.ஜ.க தலைமையிலான கூட்டணி சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தாலும் கூட எந்தவொரு தொகுதியிலும் பாஜக வெல்லும் அளவுக்கு ஆதரவு இல்லை என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. நேமம் தொகுதியில் LDF சுமார் 41 சதவீத வாக்கு சதவீதத்தைப் பெறும் என்றும் பாஜக 2வது இடத்திற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல காசர்கோடு தொகுதியிலும் கடும் போட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+