டிக் டாக் பிரபலம் ஆருணி... பலரின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்.. கேரளாவில் திடீர் மரணம்
திருவனந்தபுரம்: இளம் வயதிலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்த மலையாள குழந்தை நட்சத்திரமும், டிக்டாக் பிரபலமுமான ஆருணி பன்றிக் காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்னிந்தியாவில் டிக் டாக் பயன்படுத்துபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கேரளாவைச் சேர்ந்த ஆருணி. பெரிய கண்களுடன் அபிநயம் காட்டும் முகபாவனைளுடன் கூடிய 9 வயதான இந்தச் சிறுமியின் டிக்டாக் பாடல்களுக்கு ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர்.

மலையாளத்தில் வெளியான பழைய புதிய பாடல்களை தனது முகபாவனைகள் மற்றும் கண் அசைவுகள் மூலம் வெளியிட்டு ஆயிரமாயிரம் ரசிகர்களைக் கொண்டவர் ஆருணி.
ஊர்வசியின் தலையணை மந்திரம், லிஸியின் தாளவட்டம் மற்றும் இஷா தல்வாரின் தட்டாதின் மறையாது போன்ற படத்தின் காட்சிகளும், பாடல்களும் போன்றவை ஆருணியின் நூற்றுக்கணக்கான வீடியோக்களில் சில எடுத்துக்காட்டுக்கள்.
இந்த நிலையில் கடுமையான தலைவலி காரணமாக திருவனந்தபுரம் எஸ் ஐ டி மருத்துவமனையில் ஆருணி அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆருணி வியாழக்கிழமையன்று உயிரிழந்தார். ஆருணியின் மறைவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இனி இந்த குட்டி தேவதையை என்று காண்போம் என்று டிக்டாக் பயன்படுத்துவோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டிக்டாக்கில் இருக்கும் ஆருணியின் பயோவில் இப்படிக் குறிபிடப்பட்டிருக்கிறது. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்'.
கடந்தாண்டு சௌதி அரேபியாவில், சிறுமி ஆருணியின் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார். 4ம் வகுப்புப் படித்து வந்த ஆருணிக்கு டிக்டாக்கில் ஏராளமான ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications