திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

18 படிகளில் ஏறாத பெண்கள்.. பின்புறமாக அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்த போலீஸ்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த இரு பெண்களையும் 18 படிகளில் அழைத்து செல்லாமல் பின்புறமாக போலீஸார் அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்களை தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

தடுத்து

தடுத்து

இதையடுத்து ஐப்பசி மாத நடைத்திறப்பை அடுத்து பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்நிலையில் சபரிமலை கோயிலுக்குள் இன்று அதிகாலை இரு பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலப்புரம் பகுதியைச்சேர்ந்த கனகதுர்காவும் (46) கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்துவும் (40) போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

18 படிகள்

18 படிகள்

சுமார் 3.45 மணியளவில் அவர்கள் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். இதை கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதி செய்தார். இந்நிலையில் இரு பெண்களும் 18 படிகள் வழியாக அழைத்து செல்லப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

18 படி மீது அனுமதியில்லை

18 படி மீது அனுமதியில்லை

போலீஸார் அவர்கள் இருவரையும் பின்புறமாக அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் 18 படி மீது அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bindhu and Kanaga Durga had darshan at Sabarimala by not stepping in 18 holy steps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X