Kerala: அடுத்த நொடி உயிருடன் இருக்க மாட்டோம்னு தெரியாதே! கேரள விபத்துக்கு முன் காரில் 7 மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த கோர விபத்தில் சிக்கிய திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இந்த விபத்துக்கு முன்னர் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் நேற்று இரவு நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் அந்த காரில் பயணம் செய்த 7 மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

kerala accident

குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி அந்த கார் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது பணம்பிக்குன்னு என்ற இடத்தில் அதே திசையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்கும் போது அவரது சட்டை பையில் கல்லூரியின் அடையாள அட்டை இருந்தது. அதை வைத்துதான் அவர்கள் தமிழகத்தின் திண்டுக்கல், மதுரையை சேர்ந்த மாணவர்கள் என தெரியவந்தது. அவர்கள் 7 பேரும் திண்டுக்கல் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இவர்களுடன் சேர்ந்து அந்த காரை ஓட்டிய டிரைவரும் உயிரிழந்தார். விபத்திற்கான காரணம் குறித்து போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் சில விஷயங்கள் தெரியவந்துள்ளது. அதாவது சாலை பணிகள் நடந்து வருவது குறித்தும் சாலை முடிகிறது, சாலை திருப்பம் குறித்தும் எந்த எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை என்கிறார்கள்.

மேலும் போதிய வெளிச்சம் இல்லாத அந்த பகுதியில் லாரிகளை நிற்க வைத்துள்ளனர். மேலும் எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் அந்த கார் தனது வேகத்தை குறைத்திருக்கும், விபத்தும் நிகழ்ந்திருக்காது.

ஆனால் சாலை இருப்பதாக கருதி அதே வேகத்தில் பயணித்ததால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது என்கிறார்கள். இந்த விபத்து நடப்பதற்கு முன்னர் 7 மாணவர்களும் காரில் ஜாலியாக பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த பெற்றோர் பதறும் காட்சி காண்போரை கலங்கச் செய்கிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்தவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா, யுவசஞ்சித், விஸ்வா, ஜோசுவா, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ், பிரசன்னா ஆகியோர் என தெரியவந்தது. மீதமுள்ள இருவரின் அடையாளம் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+