"வாந்தியா வருதுடா".. கண்ணை மூட சொல்லி பதற வைத்த கிரீஷ்மா.. யார் அந்த நபர்கள்.. வாய்ஸ் டெஸ்ட்டும் ஓவர்
காதலனை கொன்ற க்ரீஷ்மாவுக்கு குரல் பரிசோதனை ஆல் இந்தியா ரேடியோவில் நடத்தப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொன்ற கிரீஷ்மாவுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.. பின்னர், இதுவரை விசாரணையில் தெரியவந்த தகவல்கள், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த மாதம் 14ம் தேதி தன்னுடைய வீட்டில் வைத்து ஷாரோனுக்கு, க்ரீஷ்மா கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்துள்ளார்..
அதன் பிறகு தான் உடல்நிலை மோசமாகி திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து ஷாரோன் இறந்தார்.. சாகப் போகும் கடைசி நேரத்திலும் கூட கிரீஷ்மா மீதான தனது காதலையும், பாசத்தையும் கலந்து கொடுத்து விட்டு அநியாயமாக உயிரை விட்டிருந்தார் ஷாரோன்..

நோ அலட்டல்
அவர்கள் இருவருக்கும் இடையிலான கடைசி நேர வாட்ஸ் ஆப் சாட் குறித்த தகவல்கள் இப்போது வரை இணையத்தில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.. விஷத்தை கலந்து கசாயம் என்று கூறி குடிக்க வைத்து ஷரோனை துடிக்க துடிக்க கொன்றிருக்கிறார் கிரீஷ்மா. தனது துணிகர செயலுக்காக அவர் கொஞ்சம் கூட பதட்டமே அடையவில்லை என்பதை அவருக்கும் ஷரோனுக்கும் இடையிலான கடைசி நிமிடங்கள் வெளிப்படுத்தி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

வாந்தி வாந்தி
ஒன்றுக்கு பத்து முறை ஷரோனைக் கொல்ல முயன்று கடைசியாகத்தான் அதில் வென்றிருக்கிறார் கிரீஷ்மா. மிக மிக தெளிவாக ஸ்கெட்ச் போட்டு அந்தப் பையனைக் கொன்றுள்ளார். கடைசியாக கசாயம் என்ற பெயரில் அவர் கொடுத்த விஷத்தை சாப்பிட்ட ஷரோனுக்கு வாந்தி வந்துள்ளது. அதுகுறித்து வாட்ஸ் ஆப்பில் கிரீஷ்மாவிடம் கேட்டபோது ஒன்னும் இல்லை.. பேசாம தூங்கு சரியாகிடும் என்று கூறியுள்ளார் இந்த கொடூர மனம் படைத்த பெண். இருவருக்கும் இடையிலான கடைசி நிமிட வாட்ஸ் ஆப்பில் சாட்டின்போது, "எனக்கு ஒரு மாதிரி இருக்கு. ஜூஸோ கசாயமோ எதுவோ சரியில்லை" என்று ஷாரோன் சொன்னபோது, "அப்படியா என்னாச்சுன்னு தெரியலையே" என்று அப்பாவியாக பதிலளித்துள்ளார் க்ரீஷ்மா.

ஸ்கிரீன் ஷாட்
இன்னொரு பக்கம் க்ரீஷ்மாவின் ஆடியோவும் வைரலானது.. அதில் தான் ஷாரோனுக்கு விஷம் கொடுக்கவில்லை என்று அவர் கதறி அழுதார்.. "நான் என்ன குடித்தேனோ அதைத்தான் ஷாரோனுக்கும் கொடுத்தேன். அதில் எதையும் கலக்கவில்லை... எனக்கு ஒன்றும் தெரியாது. எனக்கு ஜூஸ் மீதுதான் சந்தேகமாக உள்ளது" என்று அந்த ஆடியோவில் பேசியிருந்தார்.. இந்த ஆடியோவும் சரி, ஸ்கிரீன் ஷாட் மெசேஜ்ஜூம்சரி, இப்போதுவரை இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..

மெசேஜ் சேட்டிங்
ஆனால் தனது குற்றத்தை போலீஸாரிடம் கிரீஷ்மா ஒப்புக் கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவரது வாட்ஸ் ஆப் சாட்டும் அதை நிரூபிப்பதாக உள்ளது. வாட்ல் ஆப் சாட்டிலும் கூட அந்தப் பையன் தனக்கு வந்த வாந்தி குறித்து கேட்டபோது ஒன்றுமே தெரியாத அப்பாவி போல அப்பெண் பேசியுள்ளார். அந்தப் பெண்ணை கவலைப்படாதே என்று இந்தப் பையனும் சமாதானப்படுத்தி விட்டு செத்துப் போயிருக்கிறான்.. அதற்கு முன்பு பலமுறை ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் போட்டி நடத்தி ஷாரோனுக்கு ஜூசில் விஷம் கலந்து கொடுத்ததை அவரே வாக்குமூலங்களில் ஒப்புக் கொண்டுள்ளார்.

வாய்ஸ் டெஸ்ட்
இந்நிலையில், க்ரீஷ்மாவின் ஆடியோ பேச்சு குறித்த உண்மைதன்மை இன்று கண்டறியப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் இந்த டெஸ்ட் நடந்தது.. அதாவது, ஷாரோனை கொலை செய்துவிட்டு, போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிப்பது எப்படி? ஒருவரை விஷம் கொடுத்து எப்படி கொல்வது? என்பது உள்பட விவரங்களை கூகுளில் பார்த்து தெரிந்து கொண்டதாக போலீசிடம் வாக்குமூலத்தில் சொல்லி இருந்தார்.. இந்த நிலையில் ஒருவரை மெதுவாக கொல்லும் ஸ்லோ பாய்சனை எப்படி கொடுப்பது என்பது குறித்த விவரங்களையும் இன்டர்நெட்டில் பார்த்து படித்து வைத்திருந்ததும் மீண்டும் தெரியவந்துள்ளது. '

பெயின் கில்லர்
அதன்படி வலி நிவாரணி மாத்திரைகளை, அடிக்கடி ஜூசில் கலந்து கொடுத்தால் மெதுவாக சிறுநீரகம் செயலிழந்து மரணம் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொண்டார்.. இந்தசமயத்தில்தான், ஷாரோன், அவரது நண்பர்களுடன் கிரீஷ்மா பலமுறை வாட்ஸ் அப்கால் மூலம் பேசி உள்ளார்.. அது அவரது குரல் தானா? என்பதை கண்டுபிடிப்பதற்காக திருவனந்தபுரம் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்தில் கிரீஷ்மாவின் வாய்ஸ் டெஸ்ட் நடத்தப்பட்டது.. கிரீஷ்மாவின் 7 நாள் காவல் முடிந்துவிட்ட நிலையில், நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார்..!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications