அட்ஜெஸ்மெண்ட், உடை மாற்றும் அறை கூட இல்லை! மலையாள சினிமாவில் 17 பிரச்சனைகள்! ஹேமா கமிஷன் ரிப்போர்ட்
திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. இதற்கிடையே இந்த ரிப்போர்ட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் 17 பிரச்சினைகள் என்ன என்பதையும் பட்டியலிட்டுள்ளனர்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போது நாடு முழுக்க பேசுபொருள் ஆனது.

ஹேமா கமிஷன்: அந்த வழக்கு விசாரணை ஒரு பக்கம் நடக்க, மலையாள சினிமாவில் இதுபோல பல மோசமான சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக நடப்பதாக பகீர் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, மலையாள சினிமாவில் உள்ள நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் அமைக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த கமிஷன் ரிப்போர்ட்டில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹேமா கமிஷன் ரிப்போர்ட்டில் மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் 17 பிரச்சினைகள் குறித்து பகீர் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
1. சினிமா துறையில் நுழைவதற்கும், தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெறவும் நடிகைகள் பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தர வேண்டும் என அழுத்தம் தரப்படுகிறது.
2. சூட்டிங் ஸ்பாட், போக்குவரத்து, தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றிலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் சம்பவங்கள் நடைபெறுகிறது.
3. பாலியல் ரீதியான கோரிக்கைகளுக்கு இணங்க மறுக்கும் நடிகைகளைக் குறிவைத்து சித்திரவதை செய்யும் சம்பவங்களும் நடக்கிறது.
4. சினிமாவில் பெண்களின் அடிப்படை மனித உரிமைகள் கூட மீறப்படுகிறது.. படப்பிடிப்பு தளத்தில் கழிவறை, உடை மாற்றும் அறை போன்ற அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தித் தருவது இல்லை.
5. சூட்டிங், தங்குமிடம், போக்குவரத்து போன்றவற்றில் பெண்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை.
6. சினிமாவின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு திடீரென சட்டவிரோதமாகத் தடை விதிப்பது.
7. தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெண்கள் குரல் கொடுத்தால் இனி சினிமா துறையில் பணிபுரியவே முடியாத வகையில் தடை விதிக்கப்படும் என்ற மிரட்டுவது.
8. சினிமா துறையில் ஆண் ஆதிக்கம் மிக அதிகமாக இருக்கிறது. பாலின சார்பு மற்றும் பாகுபாடு மிக மோசமாக இருக்கிறது.
9. மது அருந்துதல், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட ஒழுக்கமின்மை சினிமாவில் மிக அதிகமாக இருக்கிறது.
10. பணியிடத்தில், தொலைப்பேசி மூலமாகப் பெண்களுக்கு எதிரான இழிவான மற்றும் அநாகரீகமான கருத்துக்களைச் சொல்லும் போக்கு அதிகரித்துள்ளது.
11. தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப இரு தரப்பிற்கும் இடையே போடப்பட்டும் ஒப்பந்தங்களை நிறைவேற்ற மறுப்பது.
12. முன்பே ஒப்புக்கொண்ட ஊதியத்தை வழங்கத் தவறுவது.
13. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ஊதியத்தில் வேறுபாடு, தெளிவான பாலின பாகுபாடு இருக்கிறது.
14. பெண்களை சினிமாவில் குறிப்பாகத் தொழில்நுட்ப துறைகளில் அனுமதிக்க மிகப் பெரிய தயக்கம் இருக்கிறது. அந்த துறைகளில் பெண்களுக்கு வாய்ப்பே அளிக்கப்படுவது இல்லை.
15. அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்
16. தங்களுக்கு என்ன சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் இருக்கிறது என்று பெண்களுக்கே உரிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.
17. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க சட்டப்பூர்வமாக அதிகாரம் படைத்த எந்தவொரு அமைப்பும் இல்லாதது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications