வயநாட்டை மீண்டும் உலுக்கிய நிலச்சரிவு! அதிகாலை நடந்த 2 சம்பவங்கள்! சிக்கிய 400 குடும்பங்கள்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வயநாட்டை உலுக்கி உள்ள நிலச்சரிவின் அதிர வைக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை. இதன் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக மும்பை, கேரளா ஆகிய இடங்களில் அதிகமாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மஹாராஷ்டிராவில் மும்பை உட்பட பல நகரங்கள் நீரில் மூழ்கிவிட்டது.

wayanad landslide kerala

அதேபோல் கர்நாடகாவிலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் இதனால் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக மிக கனமழை பெய்து வருகிறது. வயநாடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு, திரிச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.

wayanad landslide kerala

நிலச்சரிவு: இந்த மழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல் இன்று மீண்டும் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிக வீடுகள் உள்ள பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பலர் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்..

கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளன. இன்று அதிகாலை மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்ததை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது. 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

400 குடும்பங்கள் கணக்கு வைத்து.. கிட்டத்தட்ட 1000 பேருக்கும் அதிகமானோரை இதுவரை அங்கே காணவில்லை.

முண்டக்காய் நகரில் நள்ளிரவு 1 மணியளவில் கனமழையின் போது முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ​​அதிகாலை 4 மணியளவில் சூரல் மாலா பள்ளி அருகே இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது. முகாமாக செயல்படும் பள்ளி, அருகில் உள்ள வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர், சேறும் சகதியுமாக இருந்தது.

ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற ஹெலிகாப்டர்கள் வயநாடு சென்றுள்ளன. சுல்தான் பத்தேரி செயின்ட் மேரி கல்லூரியில் பரபரப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, அங்கு சூரல்மாலா-முண்டக்காய் பேரிடரை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் அவசர மருத்துவ முகாம் வருகிறது. முண்டக்கையில் இருந்து விமானம் மூலம் மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் சுல்தான் பத்தேரியில் உள்ள செயின்ட் மேரி கல்லூரியில் உள்ள ஹெலிபேடிற்கு கொண்டு வரப்படுவார்கள்.

முகாமில் இருந்து, உடல்கள் பிணவறைக்கு மாற்றப்படும் பணிகள் நடந்து வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள். மாவட்ட நிர்வாகம் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களையும் தன்னார்வத் தொண்டர்களாகப் பதிவு செய்து, வெளியேற்றம் மற்றும் சுகாதாரப் பணிகளில் உதவுமாறு அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவில் 2019ல் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 121 பேர் பலியாகினர். தற்போது மீண்டும் அங்கே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+