ஸ்கூட்டி ஓட்டும் பெண்களிடம் தப்பவே முடியாதா? கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு நேர்ந்ததை பாருங்க
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனங்கள் நேற்று ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பினராயி விஜயன் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில் அந்த விபத்துக்கு ஸ்கூட்டி ஓட்டி சென்ற பெண் தான் முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
கேரளாவில் இடதுசாரிகளின்ஆட்சி நடந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் 2வது முறையாக முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இவர் நேற்று கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பினராயி விஜயனின் பாதுகாப்புக்காக போலீசார் அவரது காரின் முன்பும், பின்பும் சென்றன.
இந்த கான்வாய் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தன. திருவனந்தபுரம் வாமனபுரம் பார்க் அருகே கான்வாய் வாகனங்கள் சென்றன. அப்போது முதலில் சென்ற ஜீப் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தினார். இதையடுத்து பின்னால் வந்த வாகனங்களும் பிரேக் அடித்தன. ஆனாலும் வாகனங்கள் உடனடியாக நிற்காமல் முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதின.
ஆம்புலன்ஸ் உள்பட அடுத்தடுத்து சென்ற 7 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தை சந்தித்தன. கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற வாகனம் விபத்தில் சிக்கினாலும் கூட அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் வாகனங்கள் மட்டுமே சேதமடைந்தன. அதன்பிறகு பினராயி விஜயன் அங்கிருந்து சிறிது நேரத்தில் திருவனந்தபுரம் சென்றார்.
இதற்கிடையே தான் பினராயி விஜயனின் கான்வாய் வாகனங்கள் விபத்தில் சிக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோ மூலம் விபத்துக்கு ஸ்கூட்டி ஓட்டி சென்ற பெண் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதாவது கான்வாய் வாகனங்கள் வருவதற்கு முன்பு பெண் ஒருவர் ஸ்கூட்டியில் நடுரோட்டில் வந்து நிற்கிறார். அதன்பிறகு அவர் திடீரென்று சாலையின் குறுக்காக ஸ்கூட்டியை திருப்பி தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்படுகிறார்.
இந்த வேளையில் மின்னல் வேகத்தில் வந்த கான்வாய் வாகனத்தின் டிரைவர் பெண் மீது மோதாமல் இருக்க திடீரென்று பிரேக் போடவே அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்கள் மோதி விபத்து என்பது ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஸ்கூட்டியில் பெண்கள் கவனமாக செல்கின்றனர். ஆனாலும் கூட சில பெண்கள் கவனக்குறைவாக சென்று விபத்தில் சிக்குவதும் நடக்கிறது. இதனை அடிக்கடி மீம்களாக்கி வலைதளங்களில் பரப்பபட்டு வருகின்றன. அதேபோல் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது பினராயி விஜயனின் கான்வாய் கார்கள் விபத்தில் சிக்கியது ஸ்கூட்டரில் சென்ற பெண் தான் காரணம் என்பதால் இதனை பார்க்கும் பலரும் ஒரு மாநில முதல்வராக இருந்தாலும் கூட ஸ்கூட்டி ஓட்டும் பெண்களிடம் தப்பிக்க முடியாது? என கூறி வருகின்றனர்.
-
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications