"ஓகே தான், ஆனா.." ரேபரேலியில் களமிறங்கிய ராகுல் காந்தி.. வயநாடு தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்
திருவனந்தபுரம்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், இது தொடர்பாக கேரள மாநிலம் வயநாடு மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
காங்கிரஸின் ராகுல் காந்தி கடந்த 2019 தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் அமேதி தொகுதியில் அவர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அதேநேரம் வயநாடு தொகுதியில் அவர் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றார்.

இந்தச் சூழலில் இந்தாண்டு அவர் முதலில் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அங்கு ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதேநேரம் அவர் உபி மாநிலத்திலும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றே கூறப்பட்டது.
ரேபரேலி தொகுதி: அவர் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. இருப்பினும், யாரும் எதிர்பாராத வகையில் அவர் தனது தாயார் கடந்த முறை போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய நபரான கேஎல் சர்மா போட்டியிடுகிறார்.
ரேபரேலி தொகுதி என்பது காங்கிரஸின் கோட்டை. அங்கு பாஜகவும் வலுவான வேட்பாளரை இறக்காத நிலையில், அங்கு ராகுல் காந்தி வெல்வது உறுதி என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். ஒரு வேளை ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலுமே வெற்றி பெற்றால் அவர் எதாவது ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும்.
ராகுல் காந்தி: இதற்கிடையே ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து வயநாடு தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம். வயநாடு தொகுதியைப் பொறுத்தவரை ஒரு தரப்பினர் அவர் ரேபரேலியிலும் போட்டியிடுவதில் தவறில்லை என்று கூறுகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் ராகுல் காந்தி இப்படிச் செய்யக்கூடாது எனக் கூறியுள்ளனர்..
ஆதரவு: வயநாட்டில் உள்ள சாலையோர கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "ஒருவர் இரண்டு இடங்களில் போட்டியிடுவதில் எந்த தவறும் இல்லை.. அவர் தேசியளவில் இந்தியா எதிர்க்கட்சியை வழிநடத்துகிறார். இதனால் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதில் தவறு இல்லை. அவர் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றால், அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்யவே வாய்ப்புகள் அதிகம். அவர் அப்படிச் செய்வது வயநாடு தொகுதிக்கு நல்லது இல்லை. என்ன நடக்கிறது என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்" என்றார்.
அங்குள்ள மூத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பிகே குன்ஹாலிக்குட்டியும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் கூறினார். அவர் கூறுகையில், "வயநாடு தவிர வேறு ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் தான் காங்கிரஸ் தேசியத் தலைமையிடம் கோரிக்கை வைத்தோம். கடந்த காலங்களில் பிரதமர் மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடவில்லையா? இது இந்தியா டீமிற்கு நல்ல பலனையே கொடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
எதிர்ப்பு: அதேநேரம் மற்றொரு தரப்பினர் ராகுல் காந்தி இப்படிச் செய்வது தவறு என்றும் அவர் வயநாடு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஒரு வேளை அவர் இரண்டு தொகுதிகளிலும் வென்றால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்துவிடுவார் என்றும் அது எப்படி சரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications