லாட்ஜில் 3 நாள்.. உருக்கிய ஷாரோனின் ஜெபம், சட்டென "அந்த" வார்த்தை சொன்ன "ஜூஸ்" பெண்.. திகைத்த போலீஸ்
காதலனுக்கு விஷம் வைத்து கொன்ற பெண் எந்தவிதமான சலனமும் இன்றி உள்ளாராம்
திருவனந்தபுரம்: காதலனை கொன்ற க்ரீஷ்மாவிடம் தொடர்ந்து சாட்சியத்தை போலீசார் பெற்று வரும் நிலையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
உயிருக்கு உயிராக நேசித்த ஷாரோனுக்கு, ஜுஸில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுள்ளார் க்ரீஷ்மா.. தற்போது இந்த கொலையாளி, கேரள குற்றப்பிரிவு போலீசாரின் பிடியில் உள்ளார்.
ஷாரோனை கொலை செய்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டதையடுத்து, 2 விதமான வாக்குமூலங்களை தந்துள்ளார்.. இதையடுத்து அவரிடம் சாட்சியங்களை போலீசார் பெற்று வருகின்றனர்..

தூய்மை காதல்
இந்த கொலை சம்பவத்துக்கு பிறகு, முதல்முறையாக அவரது வீட்டிற்கு, சாட்சியம் அளிக்க போலீசார் அழைத்து வந்துள்ளனர்.. ஷாரோனை கொலை செய்தது குறித்து நிறைய தகவல்களை சொல்லி உள்ளார்.. அந்த ஒவ்வொரு தகவலிலும், ஷாரோனை கொல்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், குறிப்பாக, 10 முறை விஷம் கொடுக்க முயற்சி நடத்தப்பட்டுள்ளதையும் விரிவாக விளக்கி உள்ளார்.. இவ்வாறு தரும் வாக்குமூலங்களில், கொலை முயற்சிகளின் திட்டங்கள் வெளிப்படுகிறதோ இல்லையோ, க்ரீஷ்மா மீது ஷாரோன் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கையும், தூய்மையான காதலும்தான் சேர்ந்தே வெளிப்படுகிறது.

சர்ச் ப்ரேயர்
அதற்கு உதாரணமாக சர்ச் சம்பவத்தை சொல்லலாம்.. க்ரீஷ்மாவுக்கும், ஷாரோனுக்கும் ரகசியத் திருமணம் நடந்ததாக சொல்லப்பட்ட வெட்டுக்காடு சர்ச்சுக்கு க்ரீஷ்மாவை நேற்றைய தினம் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்... அப்போது அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர், "இந்த சர்ச்சில் ஷாரோன் ஜெபம் செய்யும்போது, ரொம்ப நாட்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து, சந்தோஷமாக வாழ வேண்டும்" என்று பிரார்த்திருப்பார்" என்றார்.. அவர் இப்படி சொல்லும்போதே க்ரீஷ்மா குறுக்கிட்டு, "ஆமா, ஆனா அதான் எல்லாம் மாறிவிட்டதே" என்று கேஷூவலாக சொல்லி உள்ளார்..

லாட்ஜ்
அதற்கு பிறகு, க்ரீஷ்மா குழித்துறை பகுதியில் அவர் வழக்கமாக ஜூஸ் வாங்கும் கடைக்கும் அழைத்து சென்று விசாரித்திருக்கிறார்கள்.. திற்பரப்பு அருவி அருகில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் ஷாரோனுடன் 3 நாட்கள் தங்கியிருந்ததும் தெரியவந்தது.. அதனால் அந்த லாட்ஜுக்கும் க்ரீஷ்மாவை நேரில் அழைத்து சென்று விசாரித்திருக்கிறார்கள்.. சர்ச்சிலும் சரி, இந்த லாட்ஜிலும் சரி, எந்த இடத்துக்கு க்ரீஷ்மாவை அழைத்து சென்று விசாரித்தாலும், எங்கேயுமே கொஞ்சம்கூட, குற்ற உணர்வோ, பதற்றமோ இல்லாமல் மிக யதார்த்தமாக இருந்தாராம். இது கேரள போலீஸாருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாம்.

கேஷூவல்
ஆனால், எப்படி ஜூஸ் கொடுத்து கொலை நடந்தது என்பது குறித்து தெரிந்து கொள்ள, க்ரீஷ்மாவை அவரது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அப்போது க்ரீஷ்மா வீட்டின் முன்பு பொதுமக்கள், மீடியாக்கள் என திரண்டு விட்டன.. ஆனால், க்ரீஷ்மா யாரையுமே நிமிர்ந்து பார்க்காமல், தலையை கீழே குனிந்தவாறு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.. வீட்டிற்குள் நுழைந்ததுமே, அங்கு க்ரீஷ்மா வாங்கிய ஏராளமான விருதுகள் மற்றும் கோப்பைகள் ஷெல்ஃப்பில் இருந்ததை பார்த்து, அப்போது மட்டும் கிரீஷ்மா கண்ணீர் விட்டு அழுதாராம்..

நிழல் நிஜம்
மற்றபடி பொதுவெளியிலும், போலீசாரிடமும், கொலை திட்டத்தை ஒவ்வொன்றாக விலாவரியாக சொல்லும்போதும், எங்குமே சலனமற்று, கேஷூவலாகவே இருந்தாராம்.. அந்தவகையில், 22 வயது இளம்பெண்ணின் ஒவ்வொரு செயலும் மக்களை அதிர வைத்தபடியே உள்ளது.. கருணையின் நிழலாக, இரக்கத்தின் இன்னொரு அவதாரமாக, மன்னிப்பின் மறு உருவமாக, பெண்கள் காலம் காலமாக பார்க்கப்பட்டு வந்த நடைமுறைகள் எல்லாம் இதுபோன்ற நஞ்சுகளால் நொறுங்கி விழுந்து கொண்டிருக்கின்றன..!!












Click it and Unblock the Notifications