"அபார்ஷன்".. 13 வயது பிஞ்சு கர்ப்பம்.. பொங்கி எழுந்த ஹைகோர்ட்.. பறந்த உத்தரவுகள்.. மேஜர் அட்வைஸ்
செக்ஸ் கல்வி பள்ளிகளில் அவசியம் என்று கேரள ஹைகோர்ட் தெரிவித்துள்ளது
திருவனந்தபுரம்: பள்ளிகளில் பாலியல் கல்வி கற்பிக்கப்படுவது குறித்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது... வேறு ஒரு வழக்கை விசாரிக்கும்போது, இந்த அறிவுறுத்தலை கோர்ட் செய்துள்ளது.
13 வயது சிறுமி ஒருவர், அவருடைய அண்ணனால் கர்ப்பமாகிவிட்டார்.. ஆனால், இது தெரியாமல் அந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
மருத்துவமனையில் வயிற்றுவலிக்கு சிகிச்சைக்காக சென்றபோதுதான், அந்த சிறுமி 30 வார கர்ப்பம் என்பதே தெரியவந்தது..

கர்ப்பம்
அதற்கு பிறகு, கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்காக, கேரளா ஹைகோர்ட்டில் அனுமதி கோரப்பட்டது. இதற்கான மனுவை, அந்த சிறுமியின் தாயார் தாக்கல் செய்தார்.. அதில், "இளம்வயதில் கர்ப்பத்தை சுமப்பதால், உடல் மற்றும் மன ரீதியான உளைச்சல்களும், உளவியல் ரீதியான தாக்கங்களும் ஏற்படும் என்பதால், கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்...

கர்ப்ப காலம்
இதையடுத்து, இது தொடர்பான வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் வாதிடப்பட்டது.. அப்போது, 1971ம் ஆண்டின் மருத்துவ கருவுறுதல் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட கர்ப்ப காலம் 24 வாரங்கள் என்று தெரிவிக்கப்பட்டது... பின்னர் நீதிபதி வி.ஜி. அருண் இதுகுறித்த உத்தரவில் கூறியதாவது: சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு, கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக நிறுத்த அனுமதி அளிக்கப்படுகிறது..

ஆபரேஷன்
இதற்காக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஒரு மருத்துவக் குழுவை அமைத்து உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.. சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய அவரது தாய் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதேசமயம் குழந்தை பிறக்கும் போது உயிருடன் இருந்தால் அதற்கு சிறந்த முறையில் சிகிச்சையளித்து காக்க வேண்டும். மனுதாரர் குழந்தையின் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்றால் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு அதன் நலன் கருதி அரசே நேரடியாக உதவ வேண்டும்" என்றார் நீதிபதி.

ஆபாச படங்கள்
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் பின்னணி, சமூக தாக்கங்கள் குறித்து பெரிதும் கவலைப்பட்டார்.. தொடர்ந்து பேசிய அவர், "இப்போதெல்லாம் பல குற்றங்களுக்கு, நெருங்கிய உறவினர்களே காரணங்களாக இருக்கிறார்கள்.. அதனாலேயே குழந்தை கர்ப்பங்கள் குறித்து கவலைப்பட வேண்டியிருக்கிறது.. இதைதவிர, இணையதளத்தில் ஆபாசப் படங்கள் எளிதில் கிடைத்துவிடுகிறது. இவையெல்லாம் சிறுமியரிடையே மனக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, குழந்தைகள் இணையத்தில் ஆபாச படங்களை பார்க்காமல் இருப்பதை, பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.

செக்ஸ் கல்வி
இளம் தலைமுறையினருக்கு தவறான எண்ணங்கள் மனதில் பதிந்துவிடுவதால், இணையதளம் மட்டுமின்றி சோஷியல் மீடியாக்களை சரியாகவும், பாதுகாப்பவும் பயன்படுத்துவது குறித்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது அவசியம். அதேபோல, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாலியல் கல்வியையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை இன்று வந்துவிட்டது. பாலியல் தொடர்பான விஷயங்களில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்... பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் சிறுமியருக்கு சிகிச்சை அளிப்பதிலும், அவர்களை முறையாக கையாளுவதிலும் மருத்துவமனைகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்" என்றார்.

சிக்கல்
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது... இங்கு சமீபகாலமாகவே, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியர், திருமணம் முடிக்காமலேயே கர்ப்பிணியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன... ஏற்கனவே இயற்கை சீற்றங்களில் கேரள மாநிலம் சிக்கி கொண்டிருக்கும்போது, தங்கக்கடத்தல் விவகாரம், பாலியல் வன்முறைகள் பெருகிவருவது போன்றவைகளால், நெருக்கடிகள் கூடி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications