குமட்டும் ஆபாசம்.. பொறியில் சிக்கிய "பச்சைக்கிளி".. வயசுக்கு மீறிய உறவு.. இத்தனை விஐபிகளா.. ஓ காட்
திருவனந்தபுரம்: அஸ்வதி - அச்சு - அனுஸ்ரீ - அனு - இப்படி பெயர்கள் மட்டும்தான் வேறு வேறு.. ஆனால், நபர் ஒன்றுதான்.. சபலிஸ்ட்களை கண்டால் விடமாட்டார் இந்த பெண்.. ஏகப்பட்ட நபர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள். யார் இந்த பெண்?
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் சங்கரன்.. 66 வயதாகிறது.. பேங்க்கில் வேலை பார்த்துவிட்டு ரிடையர் ஆனவர்.. மனைவி இறந்துவிட்டார்..
இவருடைய மகள் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்... மனைவியும் இல்லாததால், மகளை சங்கரனால் கவனித்து கொள்ள முடியவில்லை.. 66 வயதாகிவிட்டதால், தன்னையும், மகளையும் யாராவது ஒரு பெண் கவனித்து கொண்டால் நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.. இதற்காக தன்னுடைய நண்பர் மோகன் என்பவரிடம் இதை பற்றி சொல்லவும், அவரும் உதவி செய்வதாக கூறினார்..

ரேஷன் கார்டுகள்: சில நாட்களுக்கு பிறகு, மோகன் நூரநாடு பகுதியை சேர்ந்த அஸ்வதி என்ற பெண்ணை பற்றி சொன்னார்.. 39 வயதாகிறது என்றும், அந்த பெண் நன்றாக இருவரையும் கவனித்து கொள்வார் என்றும் சொல்லி, சங்கரன் வீட்டில் கொண்டுவந்து வேலைக்கு சேர்த்துவிட்டார்.. ஒருநாள் அஸ்வதி, தனக்கு நிறைய கடன் இருப்பதாகவும், அதனை உடனே கட்டவேண்டும் என்றும் சொல்லி ரூ.40 ஆயிரம் கேட்டிருக்கிறார்.. சங்கரனும் அந்த பணத்தை தந்து உதவியிருக்கிறார்.
கடன் பிரச்சனை: பிறகு சில நாட்களுக்கு சங்கரனிடம் திருமணம் செய்து கொள்வதாகவும், ஆனால், கடன் 60 ஆயிரம் இருக்கிறது, அந்த கடனை அடைத்தால் உங்களையே கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றும் சொல்லி, ரூ.60 ஆயிரம் கேட்டுள்ளார். அந்த பணத்தையும் சங்கரன் தந்துள்ளார். ஒருநாள் அஸ்வதி, சங்கரனிடம் தன்னுடைய ஆதார்கார்டு, ரேஷன் கார்டு வீட்டில் உள்ளதால், அதை எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார்.. ஆனால், திரும்பி வரவேயில்லை..
அப்போது தான் சங்கரனுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சங்கரன் கொல்லம் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் வழக்குப்பதிவு பதிவு, தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரை கைது செய்தனர்.. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில் போலீசாரே மிரண்டு போய்விட்டார்கள்.. கொல்லத்தை சேர்ந்த அஸ்வதி, மனைவியை இழந்தவர்களை குறி வைத்து, அவர்களையே திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, பல பண மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளது அம்பலமானது. இதைவைத்து போலீசார் அடுத்தக்கட்ட விசாரணைக்குள் நுழைந்தனர்..
மெசேஞ்ஜர்: இதில், தாங்கள் நீண்டகாலமாக தேடிக்கொண்டிருந்த குற்றவாளி அஸ்வதிதான் என்பதையும் கண்டறிந்தனர். அதாவது, கேரள காவல்துறை போலீசார் சிலர், போலி கணக்குகளை முகநூலில் வைத்திருந்துள்ளனர்.. அழகான பெண்களின் போட்டோக்களை ப்ரொபைல்லாக வைத்து, ஃபேஸ்புக்கில் போலீசார் இயங்கி வந்துள்ளனர்.. இதை மோப்பம் பிடித்துவிட்டார் அஸ்வதி.. போலி முகநூல் கணக்கு வைத்திருக்கும் போலீசார்களுக்கு குறி வைத்து, அவர்களுடன் மெசேஜ்ஞ்சரில் ஆபாசமாக பேச ஆரம்பித்துள்ளார்..
ஆபாசமாக சேட்டிங் செய்வதுதான் அஸ்வதியின் ஒரே ஆயுதம். ஆபாசமாக பேசியே நெருக்கமாகிவிடுவதுடன், ஆன்லைன் மூலம் அவர்களிடம் பணத்தை கறந்துவிடுவாராம்.. அப்படித்தான் கெல்லம் ரூரல் எஸ்ஐ ஒருவர், அஸ்வதியின் அழகில் மயங்கி விழுந்துள்ளார்.. விடிய விடிய ஆபாச சாட்டிங்கும் செய்துள்ளார்.. ஒரே இரவில் 1 லட்சம் ரூபாய் வரை பறிகொடுத்துள்ளார்..
அதேபோல, 68 வயது முதியவர் ஒருவரும் அஸ்வதியிடம் சிக்கி உள்ளார்.. அஸ்வதியின் போட்டோவை பார்த்ததுமே, "நைஸ்" என்று கமெண்ட் செய்தாராம்.. இந்த ஒரு கமெண்ட்டை செய்துவிட்டு, 40 ஆயிரம் ரூபாய் அஸ்வதியிடம் இழந்துவிட்டார்.. அதாவது 68 வயது தாத்தாவையும் கல்யாணம் செய்வதாக சொல்லி, 40 ஆயிரம் பறித்துள்ளார் அஸ்வதி..

லீலைகள்: இதுபோல பல புகார்கள் அஸ்வதி மீது குவியவும், அவரது வங்கிகணக்கில் பயன்படுத்தப்பட்ட செல்போன் நம்பரை வைத்து, அஸ்வதியை போலீசார் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்.. 3 வருடங்களுக்கு முன்பு, முன்னாள் தேவசம்போர்டு அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரன் என்பவரும், அஸ்வதியின் விலையில் விழுந்து ஏமாந்து போனவர்தானாம்.. அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கடகம்பள்ளி சுரேந்திரனும் அஸ்வதியின் லீலையில் விழுந்தவர்தான் என்பது, தற்போது பரவிவரும் ஆடியோ லீக் மூலம் தெரியவந்துள்ளது..
கெட்டப் சேஞ்ச்: ஏதோ ஒரு வழக்கை விசாரிக்க போய், கடைசியில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, இந்த பெண்ணின் ஒவ்வொரு வண்டவாளமும் வெளியே வந்து கொண்டிருக்கிறது.. முக்கிய புள்ளிகளும் இவரிடம் ஏமாந்தது அறிந்து போலீசார் அதிர்ந்து போயிருக்கிறார்கள்..
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக, ஃபேஸ்புக்கில் அஸ்வதியின் மோசடிகள் நடந்துள்ளன.. இவரிடம் விழுந்தவர்கள் எல்லாருமே வயதானவர்கள்.. வயதுக்கு மீறிய நபர்களிடம் மட்டுமே ஆபாச சாட்டிங் செய்துள்ளார்.. வசதியானவர்கள் என்றால் அதற்கேற்றார்போல் டிரஸ் செய்து கொள்வாராம்.. மார்டன் டிரஸ் முதல் சேலை வரை கெட்டப் சேஞ்ச் நடந்து கொண்டே இருக்குமாம்.. இவரிடம் ஏமாந்த வயதானவர்களில் பெரும்பாலானோர் ரிடையர் ஆபீசர்ஸ் என்கிறார்கள்.. அதனால், அவர்கள் யாருமே புகார் கொடுக்க முன்வராத நிலையில், ஒருசிலர் மட்டுமே புகார் தந்துள்ளனர்.. அஸ்வதியிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறதாம்..!!
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications