தேம்பி தேம்பி இரவெல்லாம் அழுது..ரேஷ்மாவின் புதுதாலி வாசம்கூட போலியே..நிஜமாவே அந்த "குரல்" யாருடையது
திருவனந்தபுரம்: போனில் அடிக்கடி கேட்கும் அந்த பெண் குரல் யாருடையது? என்ற மனஉளைச்சலுக்கு ஆளானார் ரேஷ்மா.. இதுகுறித்த சந்தேகம்தான், இப்படியொரு விபரீத முடிவை எடுக்க காரணமாகிவிட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது முள்ளில்லாவன்முடு என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் ரேஷ்மா.. 23 வயதாகிறது.. இவருக்கு அருவிக்கரா பகுதியை சேர்ந்த அக்ஷய் ராஜ் என்பவரை பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கல்யாணம்: இரு வீட்டு பெற்றோர்களும் இணைந்து, மணமக்களின் சம்மதத்தை பெற்று, கடந்த மாதம் 12ம் தேதி இவர்களின் கல்யாணத்தை தடபுடலாக நடத்தி வைத்திருக்கிறார்கள்.
இதையடுத்து ரேஷ்மா தன்னுடைய கணவர் அக்ஷய் ராஜுடன், அருவிக்கராவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்க்கையை துவக்கினர்.

தற்கொலை: இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரேஷ்மா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.. அவரது பெட்ரூமில் உள்ள ஃபேனில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அக்ஷயின் குடும்பத்தினர் அலறி துடித்தனர்.. உடனடியாக போலீசுக்கும் தகவல் தந்துள்ளனர்.. போலீசாரும் விரைந்து வந்து, ஃபேனில் தொங்கிய நிலையில் கிடந்த ரேஷ்மாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

பிறகு, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையை கையில் எடுத்தனர். இதில், ரேஷ்மாவின் கணவர் அக்ஷய், வேறொரு பெண்ணுடன் அடிக்கடி போனில் பேசிவந்தாராம்.. அந்த பெண்ணிடமிருந்து போன் வந்தாலே, அக்ஷய்யின் பேச்சில் வித்தியாசம் தெரிவதை ரேஷ்மா கவனித்துள்ளார்.
யாரந்த குரல்: தொடர்ந்து கணவனுக்கு போன் வந்துகொண்டேயிருக்கவும், கணவருக்கு அந்த பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் ரேஷ்மா சந்தேகப்பட்டார். இந்த சந்தேகம், கடுமையான மன உளைச்சலில் கொண்டுபோய் ரேஷ்மாவை விட்டுவிட்டது.

சம்பவத்தன்றுகூட, விடிய விடிய அழுது தீர்த்த ரேஷ்மா, விடிகாலை 3 மணிக்கு தற்கொலை செய்துள்ளார். இந்த நேரத்தில், அக்ஷய் வீட்டில் இல்லை என்கிறார்கள்.. மறுநாள் காலை பெட்ரூமைவிட்டு, ரேஷ்மா வெளியே வராத நிலையில், அக்ஷய் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோதுதான், சடலத்தை கண்டு அலறியுள்ளனர்.
அதிர்ச்சி: திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அக்ஷய்யுடன் போனில் பேசிய அந்த பெண் யார்? என்று உண்மையிலேயே தெரியவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications