கேரளாவுக்கு விசிட் செய்யும் முதல்வர் விஜய்? விடி சதீசன் பதவியேற்பு விழாவில் பங்கற்க வாய்ப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி அமைக்க உள்ளது. கேரள முதல்வராக காங்கிரஸ் விடி சதீஷன் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் விஜய்யும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களில் வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இடது சாரி கூட்டணியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் முதல்வர் தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறியது.

தமிழக முதல்வர் விஜய் பங்கேற்கிறார்?
முடிவு வெளியாகி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த இழுபறி இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஒருவழியாக விடி சதீசன் முதல்வராக தேர்வு செய்யபட்டுள்ளார். இன்று மாலை நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு ஆக உள்ளார். இதையடுத்து ஆளுநர் அர்லேகரை சந்தித்து விடி சதீஷன் ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.
ஆளுநர் அழைப்பு விடுத்தததும், முதல்வராக விடி சதீஷன் பதவியேற்க உள்ளார். வரும் திங்கள் கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என்று கேரள காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் விஜய்யும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய் பதவியேற்பு விழா
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மட்டுமே தவெக வென்றது. அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் (5 எம்.எல்.ஏக்கள்), கம்யூனிஸ்டுகள், விசிக ஆகிய கட்சிகளுடன் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. பெரும் போராட்டத்திற்கு பிறகு கடந்த 10 ஆம் தேதி விஜய் முதல்வராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது பதவியேற்புக்கு பிறகு முதல்வராக நிகழ்த்திய முதல் உரையில், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கூட்டணி மற்றும் ஆதரவு கொடுத்த ராகுல் காந்தியை சகோதரர் என விஜய் பேசி நன்றி கூறியிருந்தார். மேலும் பதவியேற்ற பிறகு ராகுல் காந்தியுடன் செல்ஃபி வீடியோவும் விஜய் எடுத்திருந்தார். கேரளாவில் விஜய்க்கு ஏற்கனவே ரசிகர்கள் அதிகம் உள்ளதாலும், இதனால் விஜய் கேரள முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கேரளாவில் முதல்வர் தேர்வு
கேரளாவில் முதல்வர் பதவியை கைப்பற்ற கே.சி.வேணுகோபால், விடி சதீஷன், ரமேஷ் சென்னிதலா ஆகிய 3 பேர் காய் நகர்த்தினர். இதில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கே.சி.வேணுகோபாலுக்கு இருந்தது. அதே நேரத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக சதீசன் திகழ்ந்தார். இதற்கிடையே கேரள முதல்வர் தேர்வு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரள மாநில மேலிட பொறுப்பாளரும், பொதுச் செயலாளருமான தீபாதாஸ் முன்ஷி, மத்திய பொறுப்பாளர்கள் அஜய்மக்கான், முகுல் வாஷ்னிக் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வராக விடி சதீஷன் அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் கேரளாவில் கடந்த 11 நாட்கள் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications