"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ
திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபைத் தேர்தல் சில நாட்களில் நடைபெறும் சூழலில், அங்கு மக்களிடையே உலக தலைவர்கள் பிரச்சாரம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மக்களுடன் மக்களாக உலக தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இந்த வீடியோ குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கேரளாவில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ளது. அங்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் சூழலில், பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அங்கு பாஜக களத்தில் இருந்தாலும் கூட இடதுசாரிகள் கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

ஏஐ வீடியோ
மக்களைக் கவர அங்கு பல்வேறு வழிகளில் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. அப்படி மக்களைக் கவர உருவாக்கிய ஏஐ வீடியோக்கள் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. உலக தலைவர்கள் கேரளாவில் பிரச்சாரம் செய்வது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் முக்கிய தலைவர்கள் கேரளா சாலைகளில் இறங்கி பிரச்சாரம் செய்வது போல இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. மக்களுடன் மக்களாக உலக தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இந்த வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.
ஆர்டிலென்ஸ் ஏஐ
ஆர்டிலென்ஸ் (Artillense) குழு உருவாக்கிய இந்த ஏஐ பிரச்சார வீடியோ, வெறும் டீப் ஃபேக் என மட்டும் கடந்து போய்விட முடியாது. உள்ளூர் கலாச்சாரங்களையும் சேர்ந்து பிரதிபலிக்கும் வகையில் நுணுக்கமாக உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்களும் இதைப் பாராட்டி வருகிறார்கள்.
Check out this Kerala AI campaign video featuring world leaders. The attention to minute details - especially the Indian/Kerala mannerisms 👌🏻
— Dr Ranjan (@DocRGM) March 30, 2026
Just Unbelievable. pic.twitter.com/JhtLJOqfwc
உலக தலைவர்கள்
சுமார் 53 நொடிகள் ஓடும் இந்த வீடியோ மலையாள பாடலுடன் இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள். மறுபுறம் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜாங் இடதுசாரிகளுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள். பிரான்ஸ் அதிபர் மாக்ரோன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்வது போல உருவாக்கப்பட்டுள்ளது.
கேரள சாலைகளில் இறங்கி உலக தலைவர்கள் வாக்கு கேட்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மீன் கடையில் பிரச்சாரம் செய்யும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சாலையில் இறங்கி நடந்து சென்று வாக்கு கேட்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் தெருமுனை கூட்டத்தில் பேசும் சூழலில், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு துனி துவைத்து பிரச்சாரம் செய்கிறார்.
கலக்கும் வீடியோ
மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், வெள்ளைச் சட்டை, சுத்தியல் மற்றும் அரிவாள் சின்னம் பொறித்த சிவப்பு கம்யூனிஸ்ட் சால்வையுடன், கேரளாவின் தென்னந்தோப்பு பாதையில் நடந்து செல்லும் ஒரு கம்யூனிஸ்ட் தோழராக இருக்கிறார். இது கிராமப்புற கேரளாவின் அடையாளமாகும். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜீப் ஒன்றில் வெள்ளைச் சட்டை மற்றும் பாரம்பரிய வேட்டி அணிந்து, வாக்கு சேகரிக்கிறார். அவரது கம்பீரமான தோற்றம் தேர்தல் களத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சிவப்பு சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்து, கேரளாவின் குறுகிய தெருவில் கூட்டத்தினரை நோக்கி கை அசைக்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சாதாரண நீலச் சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து, நெரிசலான தெருவில் புடவை அணிந்த பெண்களைப் பார்த்துப் புன்னகைத்து கை அசைக்கிறார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு பரபரப்பான காய்கறி சந்தையில் ஒரு மூதாட்டியுடன் கை குலுக்குகிறார். இப்படி நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ள வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications