பாஜக கவுன்சிலரை வெளுத்து வாங்கினாரே இளம் மேயர் ஆர்யாவுக்கு திருமணம்! எம்எல்ஏவை மணக்கிறார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நாட்டின் இளம் வயதில் மேயராக பதவியேற்ற திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனுக்கும் பாலுச்சேரி எம்எல்ஏ கே. எம். சச்சின் தேவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தின் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரி மாணவியாக இருந்த இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மேயர் பதவி கொடுத்து அழகு பார்த்தது மார்க்சிஸ்ட் கட்சி. கடந்த உள்ளாட்சி தேர்தலில் கேரளா, அதிக அளவில் இளம்வயதினருக்குப் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது.

அதன் மூலம் அதிகாரத்திற்கு வந்தவர்தான் ஆர்யா ராஜேந்திரன். அப்போது அவருக்கு வயது 21. அது போல் கேரளா சட்டசபையில் மிக இளவயதில் எம்எல்ஏவாக இருப்பவர் சச்சின் தேவ் (28). இவர் இந்திய மாணவர் சங்கத்தில் மாநில செயலாளராக உள்ளார்.

இந்திய மாணவர் சங்கம்

இந்திய மாணவர் சங்கம்

அந்த அமைப்பின் தேசிய இணைச் செயலாளராகவும் உள்ளார். ஆர்யாவும் சச்சினும் சிறு வயதிலிருந்தே இந்திய மாணவர் சங்கத்தில் வளர்ந்தவர்கள். அதனால் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது. இருவரும் ஒரே கொள்கையை கொண்டவர்களாக அறியப்படுகிறது. இதனால் இருவரையும் தம்பதியாக்குவது என அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

கோழிக்கோடு

கோழிக்கோடு


கோழிக்கோட்டில் நெல்லிகோடு பகுதியில் இருக்கிறார் சச்சின் தேவ். இவர் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவர். ஆர்யா ராஜேந்திரனுக்கும் சச்சின் தேவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறுகிறது. இன்னும் திருமண தேதி முடிவு செய்யப்படவில்லை என சச்சின் தேவின் தந்தை தெரிவித்தார்.

அரசியல் சித்தாந்தம்

அரசியல் சித்தாந்தம்

இதுகுறித்து ஆர்யா கூறுகையில் நாங்கள் இருவருமே ஒரே அரசியல் சித்தாந்தத்தை கொண்டவர்கள். நாங்கள் நல்ல நண்பர்கள். இந்திய மாணவர் சங்கத்தில் இருவரும் ஒன்றாக பணியாற்றியுள்ளோம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம். இதை எங்கள் பெற்றோரிடம் தெரிவித்தோம். அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இளம் மேயருக்கும் இளம் எம்எல்ஏவுக்கும் திருமணம்

இளம் மேயருக்கும் இளம் எம்எல்ஏவுக்கும் திருமணம்

நாங்கள் இருவருமே மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்பதால் எந்த வதந்தியும் பரவாமல் இருக்க கட்சியிடமும் இதை தெரிவித்தோம் என்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு திருவனந்தபுர மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 100 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி 52 வார்டுகளில் வென்றது. அது போல் கடந்த சட்டசபை தேர்தலில் பாலுச்சேரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சச்சின் தேவ், 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். நாட்டின் இளம் மேயருக்கும், கேரளா சட்டசபையின் இளம் எம்எல்ஏவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறுகிறது.

எல்கேஜி குழந்தை

எல்கேஜி குழந்தை

மாநகராட்சி அலுவலகத்தில் பாஜக கவுன்சிலர் கரமனா அஜித் பேசுகையில் லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்படுகின்றன. மேயர் நாற்காலியில் அமர்ந்து விளையாடும் ஏ.கே.ஜி மையத்தின் எல்.கே.ஜி குழந்தைகளால் அழிக்கப்படுவதற்கான பொருட்கள் அல்ல அவைகள்' என்று ஆர்யா ராஜேந்திரன் குறித்து விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதாவது ஆர்யாவின் சிறிய வயதை விமர்சித்து பேசியிருந்தார்.

பாஜகவுக்கு ஆர்யா ராஜேந்திரன் பதில்

பாஜகவுக்கு ஆர்யா ராஜேந்திரன் பதில்

இதற்கு ஆர்யா பதிலடி கொடுக்கையில் கடந்த ஆறு மாதங்களாக நீங்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளீர்கள். நீங்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் நியாயமான விமர்சனங்களை வைக்கலாம். நீங்கள் அனைவரும் என்னை தனிப்பட்ட முறையில் வயது, அனுபவம் தொடர்பாக விமர்சித்துள்ளீர்கள். இந்த வயதில் நான் மேயராகிவிட்டால், அதற்கேற்ப எவ்வாறு செயல்படுவது என்பது எனக்குத் தெரியும், அத்தகைய அமைப்பின் மூலம் நான் வளர்ந்தேன் என்பதை பெருமையுடன் சொல்ல முடியும். இந்த மேயரும் உங்கள் வீட்டில் உள்ள சகோதரி,தாய் போன்றவர் என்பதை நீங்கள் உணர்வீர்கள். பெண்களை விமர்சிப்பவர்கள்யாராக இருந்தாலும் அது தவறுதான் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+