காலை உடைத்து.. ஆணுறுப்பில் தீ வைத்து.. சாதாரண செல்போனுக்காக.. கேரளாவில் பதற வைக்கும் ஷாக் சம்பவம்!
செல்போன் திருடியதாக இளைஞர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்
திருவனந்தபுரம்: ஒரு சாதாரண செல்போன் காணாமல் போனதற்காக, மன நலம் பாதித்த அப்பாவி ஒருவரை கேரளாவைச் சேர்ந்த சிலர் தீவைத்து எரித்துக் கொன்றிருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள பகுதி திருவல்லம்.. இங்குள்ள வயக்காட்டில் இளைஞர் ஒருவர் விழுந்து கிடப்பதாகவும், அவரை நாய்கள் கடித்துக் குதறி கொண்டிருப்பதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது..
இதனால் விரைந்து சென்ற போலீஸ், அந்த இளைஞரை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆணுறுப்பு
பரிசோதனையின்போது, அந்த இளைஞரின் கால் உடைக்கப்பட்டு இருந்தது.. ஆணுறுப்பில் சூடு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.. இதையடுத்து இந்த விசாரணையில் மிக துரிதமாக போலீசார் இறங்கினர். அப்போதுதான், விஷயம் வெளியே வந்தது.

செல்போன்
மலப்புரம் பகுதியை சேர்ந்த ஒருவர், திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனில் போன வியாழக்கிழமை படுத்து தூங்கியிருக்கிறார்.. பிறகு எழுந்து பார்த்தால், 40 ஆயிரம் ரூபாய், செல்போன் வைத்திருந்த அவரது பையை யாரோ திருடி உள்ளனர். இதனால், ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் போய் இதை சொன்னார். மேலும் ஒருநபரின் அங்க அடையாளத்தை சொல்லி, அவர்தான் திருடியிருக்க கூடும் என்றார்.

நான் திருடல
அந்த அடையாளத்தை கேட்ட டிரைவர்கள் உட்பட 5 பேர், "ஓ.. அந்த ஆளா.. எங்களுக்கு தெரியும்" என்று சொல்லி.. அஜீஸ் என்பவரை பிடித்து ஆட்டோவில் ஏற்றி கடத்தி உள்ளனர். அஜீஸ் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த அப்பாவி.. சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிகிறது.. "நான் திருடவில்லை" என்று எவ்வளவோ சொல்லியும் அந்த 5 பேரும் கேட்கவில்லை. திருவல்லம் பகுதியில் ஒரு வீட்டில் அஜீஸை அடித்து உதைத்து, திருடிய பை எங்கே என்று கேட்டு சித்ரவதை செய்துள்ளனர்.

5 பேர் கைது
அப்போதுதான் அவரது பிறப்புறுப்பிலும் சூடு வைத்துள்ளனர்.. கை, கால்களை அடித்து நொறுக்கி உள்ளனர். கடைசியில் அதே ஆட்டோவில் அவரை வயலில் தூக்கி போட்டுவிட்டு வந்துள்ளனர்.. ஆட்டோ டிரைவர்கள் ரத்த காயத்துடன் அஜீஸை, ஆட்டோவில் ஏற்றுவதை அங்கிருந்த ஒருசிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை வைத்துதான் போலீஸார் அந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

அதிர்ச்சி
வெறும் சந்தேகத்தின்பேரால், ஒரு அப்பாவி, மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை ஒரு கும்பலே சேர்ந்து அடித்து கொன்று போட்டது கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படித்தான் ஒருவரை சாப்பாடு திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞரை கொடூரமாக அடித்துக் கொன்றது இதே கேரளாவைச் சேர்ந்த ஒரு கும்பல். இப்போது இன்னொரு அப்பாவியின் உயிரை காவு எடுத்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications