கொடைக்கானலில் முக்கியமாக பார்க்க வேண்டிய சிறந்த எட்டு அருவிகள்.. பலருக்கும் தெரியாத இடங்கள்
கொடைக்கானல்: இந்தியாவில் புகழ் பெற்ற சுற்றுலாதளங்களில் ஒன்றான கொடைக்கானல் போனீர்கள் என்றால், நீங்கள் முக்கியமாக பார்க்க வேண்டிய எட்டு அருவிகளை இப்போது பார்ப்போம்.
வார இறுதியானாலே பலரும் சுற்றுலா தளங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. மனஅழுத்தம் அதிகரித்த காரணத்தால் விடுமுறை நாட்களை தங்களுக்கு பிடித்தமான இடத்தில் பிடித்தபடி வாழ்வதை பலரும் விரும்புகிறார்கள். இதனால் முன்பை விட அதிகமாக சுற்றுலா தளங்களுக்கு செல்ல விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது ஒருபுறம் எனில், இயற்கையோடு வாழ விரும்பும் பலர், நகர வாழ்க்கையில் இருந்து விடுதலை பெறும் நோக்கில், இருசக்கர வாகனத்திலும், நான்கு சக்கர வாகனத்திலும், நீண்ட தூரம் பயணிப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல இளைஞர்கள் பைக்கில் நீண்ட தூரம் பயணிக்கிறார்கள். பலரது விருப்பம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆக இருக்கிறது.
கொடைக்கானல் போனீர்கள் என்றால் அங்கு வானிலை எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அங்கு தங்கி சுற்றி பார்க்க விரும்பும் இளைஞர்களே, அடுத்த முறை கொடைக்கானல் போனீர்கள் என்றால், நீங்கள் முக்கியமாக பார்க்க வேண்டிய எட்டு அருவிகளை இப்போது பார்ப்போம்.

அஞ்சுவீடு அருவி: கொடைக்கானல் எவ்வளவு அழகான இடங்களை வைத்திருக்கிறது என்பதை பார்த்தவர்களுக்கு மட்டும் தெரியும். கொடைக்கானல் நகர மையத்தில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ள அஞ்சுவீடு நீர்வீழ்ச்சி இயற்கை எழில் கொஞ்சும் வில்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது. பாலாறு ஆறு அருவிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. சுமார் 80 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீர் பாய்வது பார்ப்பதற்கு உங்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். யானைப் பள்ளத்தாக்கில் உள்ள "அஞ்சு வீடு" என்று அழைக்கப்படும் அருகிலுள்ள கிராமத்தின் பெயரால் இந்த நீர்வீழ்ச்சிக்கு பெயரிடப்பட்டது. நீங்கள் காட்டுக்குள் அமைதியான சூழலில் அருவியை பார்க்க விரும்பினால் புறப்படுங்கள்
பாம்பார் அருவி : கொடைக்கானல் நகரில் பாம்பார் ஆற்றில் இந்த பெய்ர் பால்ஸ் உள்ளது. இதுவும் மிகவும் பிரபலமான பகுதியாகும். டால்பின் ரோஸ் பகுதியில் அமைந்துள்ளது.

கூக்கால் அருவி: கொடைக்கானல் நகரில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கூக்கால் கிரமத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. இந்த அருவி முன்பு யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் சமூக ஊடகங்களால் மிகவும் பிரபலம் அடைந்தது.
இதுதவிர பூம்பாறை அருவி, முத்தப்பன் காட்டு அருவி, வட்டக்கானல் அருவி, லிரில் அருவி, சில்வர் கேஸ்கர்ட் போன்ற அருவிகளும் மிகவும் அருமையாக இருக்கும். புலிச்சாறு அருவி, ஓராவி அருவி போன்றவையும் சிறப்பாக இருக்கும்.

கொடைக்கானலில் குளிக்க வேண்டும் என்றால், கும்பக்கரை அருவிக்கு வர வேண்டும். கிட்டத்தட்ட மலையை விட்டு முழுமையாக கீழே இறங்க வேண்டும். பெரியகுளம் அருகே 7 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த அருவி குளிக்க விரும்புவோருக்கு சொர்க்கம். இங்கிருந்து கொடைக்கானலுக்கு வெறும் 15 கிமீ தூரம் தான். வெள்ளகவி கிராமம் வழியாக நடந்து சென்றால் அடைய முடியும். ஆனால் வனத்துறை அனுமதி இருந்தால் தான் டிரெக்கிங் போக முடியும்.
கொடைக்கானலில் முக்கியமாக பார்க்க வேண்டிய எட்டு அருவிகள் pic.twitter.com/qeINuELhG9
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) July 9, 2023
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications