இந்தியாவிற்கே அதிசயம்.. இந்த மரத்திற்குள் தண்ணீர் தொட்டியே இருக்கு.. நிரூபித்த பழங்குடி மக்கள்
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேச வனத் துறை அதிகாரிகள் சமீபத்தில் பாப்பிகொண்டா தேசியப் பூங்காவில் இந்திய லாரல் மரத்தின் பட்டையை வெட்டி பரிசோதனை நடத்தினார்கள். அதில் இந்திய லாரல் மரங்கள் இயற்கை நீரை, குறிப்பாக கோடை காலத்தில் சேமித்து வைக்கின்றன என்ற பழங்குடியினரின் கூற்றை உறுதிப்படுத்தினர்.
இந்தியாவில் உள்ள வனப்பகுதிகள் ஒவ்வொன்றும் ஒரு அதிசயத்தை பதுக்கி வைத்துள்ளது. அந்த அதிசயங்களை கண்டுபிடித்த பழங்குடியினர், காலம் காலமாக தனது சந்ததிகளுக்கு சொல்லி கொடுத்து வளர்த்து வருகிறார்கள்.. அப்படி அவர்களால் பல அரிய பொக்கிசங்கள் நமக்கு கிடைத்துள்ளன..

இந்தியாவின் மிக பழமையான மலைத்தொடரான மேற்கு தொடர்ச்சி மலையாக இருந்தாலும் சரி, ஆபத்தும் அழகும் அதிகம் நிறைந்த இமயலை ஆகட்டும், விந்திய மலை தொடர் மற்றும் , கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் ஆரவல்லி மலைத்தொடர் என எல்லா மலையிலும் பொக்கிசங்கள் நிறைந்துள்ளன.
அப்படிப்பட்ட பொக்கிசம் ஒன்று தான் இப்போது நமக்கு தெரியவந்துள்ளது. ஆந்திராவின் கோதாவரி பகுதியில் உள்ள பாபிகொண்டா மலைத்தொடரில் பழங்குடியினக் குழுவான கோண்டா ரெட்டி பழங்குடியினர் வசிக்கிறார்கள். இவர்கள் வசிக்கும் மாவட்டம் என்பது அலுரி சீதாராம ராஜு மாவட்டத்தின் உள்ள பகுதியாகும். பாபிகொண்டா தேசிய பூங்காவில் தான் பல ஆண்டுளாக கோண்டா ரெட்டி பழங்குடியினர் வசிக்கிறார்கள்.
இவர்கள் பரம்பரை பரம்பரையாக தங்கள் குழந்தைகளுக்கு இந்த மலைகளில் உள்ள பல்வேறு அற்புதங்கள் குறித்து கூறி சென்றுள்ளார்கள். வனத்துறையினருக்கு தெரியாத பல அரிய மூலிகைகள்,செடிகள் மரங்கள் பற்றி இவர்கள் அறிந்துள்ளார்கள். இவர்களின் அற்புதமான கண்டுபிடிப்பு மற்றும் அறிவினை கண்டு ஆந்திர வனத்துறை வியந்துள்ளது.
மரத்தில் தண்ணீர் இருப்பதாகவும், அது வெளியில் பீய்ச்சி அடிக்கும் என்றும் கோண்டா ரெட்டி பழங்குடியினர் வனத்துறையினரிடம் கூறியுள்ளனர். இதை உறுதி செய்ய வனத்துறை விரும்பியது. இந்நிலையில் ரம்பசோடவரம் கோட்ட வன அலுவலர் ஜி.ஜி. நரேந்திரன் தலைமையிலான குழு பாபிகொண்டா தேசிய பூங்காவில் காணப்படும் இந்திய லாரல் மரத்தின் (டெர்மினாலியா டோமென்டோசா) மரத்தின் பட்டைகளை ஆந்திர வனத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை வெட்டினர். தேசிய பூங்காவில் வழக்கமாக நடக்கும் ஒரு பரிசோதனை முயற்சியாக இது நடந்தது.
இதில் வெட்டப்பட்ட இந்திய லாரல் மரத்திலிருந்து தண்ணீர் தெறித்தது. இதை பார்த்து வியந்த வனத்துறையினரிடம் கோண்டா ரெட்டி பழங்குடியினர், மரத்தைப் பற்றிய தங்களது முன்னோர்களின் அறிவை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டனர். பொதுவாக வறண்ட கோடை காலங்களில், இந்திய லாரல் மரங்கள், கடுமையான மணம் மற்றும் புளிப்பு சுவை கொண்ட தண்ணீரை சேமித்து வைக்கிறது. இது இந்திய காடுகளின் மரங்களில் காணப்படும் ஒரு அற்புதமான விஷயமாக வனத்துறையினர் கூறுகிறார்கள்
ஆந்திரப் பிரதேச வனத்துறை சமீபத்தில் பாப்பிகொண்டா தேசியப் பூங்காவில் ஒரு பரிசோதனையை நடத்தியது, இது கோண்டா ரெட்டி பழங்குடியினரின் பழங்குடி அறிவை உறுதிப்படுத்தியது.
— Aadhavan (@aadaavaan) April 1, 2024
அதிகாரிகள் இந்திய லாரல் மரங்களிலிருந்து (Terminalia tomentosa) பட்டைகளை வெட்டி, இந்த மரங்கள் இயற்கை நீரை, குறிப்பாக… pic.twitter.com/GbQEirJl4f
இந்தியன் சில்வர் ஓக் என்று அழைக்கப்படும், இந்திய லாரலின் மரங்களுக்கு சந்தனம் மற்றும் செம்மரத்தை போல் மிகவும் காஸ்ட்லியான மரம் ஆகும். அரிய வகையான இந்த மரங்கள் எங்கு உள்ளது என்பதை குறித்து வனத்துறையினர் கூறவில்லை... மரங்களை திருடர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக எங்கு உள்ளது என்பதை பற்றி வனத்துறை தகவல் வெளியிடவில்லை. இருப்பிடத்தை, இனங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக வெளியிடவில்லை.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications