மலை சாலையில் பைக்கில் போனவர் தவறி விழப்போன நிலையில்.. சட்டென கடவுள் போல் வந்த நபர்.. பாருங்க
சென்னை: மலைச் சாலையில் நல்ல மேட்டில் பைக்கில் குடும்பத்துடன் போனவர் தவறி விழப்போன நிலையில் சட்டென கடவுள் போல் வந்த நபர் காப்பாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
நாம் ஆபத்தில் இருக்கும் திடீரென நமக்கே தெரியாமல் யாராவது வந்து நம்மை அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றினால் அவர்களை கடவுளாகவே நாம் பார்ப்போம். வாகனங்களில் செல்வோர் அதிக அளவில் ஆபத்துக்களை எதிர்கொண்டிருப்பார்கள்.

பொதுவாக மலை சாலைகளில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். கொஞ்சம் ஸ்லிப்பானாலும் பெரிய விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. மலை சாலைகளில் மிகவும் உயரத்தில் ஏறும் போது திடீரென வண்டி ஆஃப் ஆகிவிட்டால், வண்டி பிரேக் பிடிக்க வேண்டும். அப்படி சரியான நேரத்தில் பிரேக் பிடிக்காமல் போனால் பின்புறமாக வண்டி சென்று கவிழ்ந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோல் மலை சாலையில் சாலையில் இறக்கத்தில் செல்லும் போது பேருந்து அல்லது கார் அல்லது லாரி போன்ற பெரிய வாகனங்கள் ஆஃப் ஆகாமல் செல்ல வேண்டும். அப்படி ஆப் ஆகிவிட்டால் வாகனம் பிரேக் பிடிக்காது. பிரேக் பெயிலியர் ஆகிவிடும்.. அதன்பிறகு ஏதாவது மரத்தில் மோதியோ அல்லது அல்லது பாலத்தின் சுவர்களில் மோதிதான் வாகனத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். அப்படியான சூழல்களில் மிகப்பெரிய விபத்து ஏற்படும். பலரும் காயம் அடையவோ உயிரிழப்பு ஏற்படவோ வாய்ப்பு அதிகம்.

மலை சாலையில் அப்படி ஒருவர் பயணத்தின் போது மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார். நல்ல வேளையாக அந்த வழியாக வந்த நபர் அவரை காப்பாற்றி உள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோ ஸ்கிரிப்ட் வீடியோவா அல்லது எதார்த்தமாக எடுக்கப்பட்ட வீடியோவா என்பது தெரியவில்லை.. அதேபோல் எங்கு எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள்.
கை நிறைய செல்வம் இருப்பவன் அல்ல மனம் நிறைய நன்மை இருப்பவன் தான் இந்த பூமியில் பணக்காரன்..!! pic.twitter.com/057eTyXqsD
— Rajini (@rajini198080) May 24, 2024
அதில் மனைவியுடன் ஒருவர் மலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார்.அந்த சாலை நன்கு மேடாகவும் வளைவாகவும் இருக்கிறது. அந்த வளைவில் இருசக்கர வாகனம் வரும் போது திடீரென ஆஃப் ஆகிவிடுகிறது. அதனை தொடர்ந்து அந்த இரு சக்கர வாகனம் பின்னால் செல்ல தொடங்குகிறது. வாகனத்தை ஓட்டிய நபர் பிரேக் போட்டு தடுக்க முயற்சிக்கிறார். ஆனால் நல்ல இறக்கம் என்பதால் வாகனம் அப்படியே பின்னால் செல்ல தொடங்குகிறது.
இதனை கண்ட நபர், கண் இமைக்கும் நேரத்தில் ஓடிச்சென்று இருசக்கர வாகனத்தை பின்னால் போய் நின்று பிடித்து தடுக்கிறார். வாகனம் வேகம் கட்டுப்படுகிறது. அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்து வழக்கம் போல் பயணித்து செல்கிறார். பைக்கில் குடும்பத்துடன் போனவர் தவறி விழப்போன நிலையில் சட்டென கடவுள் போல் வந்த நபர் காப்பாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications