ஆடி மாதம் வந்தாச்சு.. அம்மனை தரிசிக்க ரெடியா? பாக்கெட்டை கடிக்காத பட்ஜெட் சுற்றுலா! அசத்துதே அரசு!
சென்னை: ஆடி மாதம் துவங்கியிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை ஒரு மாதம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆடி மாத அம்மன் கோவில் சுற்றுலா திட்டத்தை மிக குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்துள்ளது. ஜூலை 18ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கி இருக்கும் நிலையில் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் சுற்றுலா திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது.
சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா ஜூலை 18 முதல் ஆக. 15 வரை ஒரு மாதம் காலத்துக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படுகிறது.

ஆடி அம்மன் சுற்றுலா சென்னை-1: (ஒரே நாளில் 8 அம்மன் கோயில்கள்): சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு காளிகாம்பாள் கோயில், பாரிமுனை - அங்காள பரமேஸ்வரி கோயில், ராயபுரம் - வடிவுடையம்மன் கோயில், திருவொற்றியூர் - பவானி அம்மன் கோயில், பெரியபாளையம் - அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், புட்லூர் - திருவுடையம்மன் கோயில், திருமுல்லைவாயில் - பச்சையம்மன் கோயில், திருமுல்லைவாயில் - பாலியம்மன் கோயில், வில்லிவாக்கம் ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1000.
ஆடி அம்மன் சுற்றுலா சென்னை-2: (ஒரே நாளில் 10 அம்மன் கோயில்கள்): சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு கற்பகாம்பாள் கோயில், மைலாப்பூர் - முண்டகண்ணி அம்மன் கோயில், மைலாப்பூர் - கோலவிழியம்மன் கோயில், மைலாப்பூர் - ஆலயம்மன் கோயில், தேனாம்பேட்டை - முப்பாத்தம்மன் கோயில், தி.நகர் - பிடாரி இளங்காளி அம்மன் கோயில், சைதாப்பேட்டை- அஷ்டலெஷ்மி கோயில், பெசண்ட் நகர் - காமாட்சி அம்மன் கோயில், மாங்காடு- தேவி கருமாரியம்மன் கோயில், திருவேற்காடு- பாதாள பொன்னியம்மன் கோயில், கீழ்பாக்கம் ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும்வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.800.
ஆடி அம்மன் சுற்றுலா - மதுரை: மதுரை, ஓட்டல் தமிழ்நாடு, அழகர் கோயில் சாலையிலிருந்து மீனாட்சி அம்மன் கோயில், மதுரை - மாரியம்மன் கோயில், வண்டியூர்- காளியம்மன் கோயில், மடப்புரம் - வெட்டுடையார் காளியம்மன் கோயில், விட்டனேரி - முத்து மாரியம்மன் கோயில், தாயமங்கலம் - ராக்காயி அம்மன் கோயில், அழகர் கோயில், ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களிலும் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1400.
ஆடி அம்மன் சுற்றுலா - திருச்சி: திருச்சியில் வெக்காளியம்மன் கோயில், உறையூர் - கமலவல்லி நாச்சியார் கோயில், உறையூர் - அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல் - மாரியம்மன் கோயில், சமயபுரம் - உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயில், சமயபுரம் - மதுர காளியம்மன் கோயில், சிறுவாச்சூர் - பொன்னேஸ்வரி அம்மன் கோயில், பொன்மலை - உக்கிர காளியம்மன் கோயில், திருச்சி ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1100.
ஆடி அம்மன் சுற்றுலா - தஞ்சாவூர்: வராகி அம்மன் (பெரிய கோயில்) கோயில், தஞ்சாவூர் - பங்காரு காமாட்சி அம்மன் கோயில், தஞ்சாவூர் - மகா மாரியம்மன் கோயில், புன்னைநல்லூர் - கற்பரட்சாம்பிகை கோயில், திருக்கருகாவூர் - துர்கை அம்மன் கோயில், பட்டீஸ்வரம் - பாடைகட்டி மகா மாரியம்மன் கோயில், வலங்கைமான் - நாகநாதசுவாமி கிரிகுஜாம்பிகை கோயில், திருநாகேஸ்வரம் - காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோயில், மகாமக குளம், கும்பகோணம் - ஐராவதேசுவரர் (பெரியநாயகி அம்மன்) கோயில், தாராசுரம் ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1400 .
இச்சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோயில்களை ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் தரிசிக்கும் பொருட்டு, 5 நாட்கள் 108 அம்மன் கோயில்கள் சுற்றுலாவுக்கும், ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் ராமேஸ்வரம் (ஆடி அமாவாசை) சுற்றுலாவுக்கும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த சுற்றுலாக்களுக்கு http://www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 180042531111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்" என கூறப்பட்டுள்ள்து.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications