தமிழ்நாட்டிலேயே அழகான திரில்லான ரூட்.. ஆனால் மழை பெய்யும் காலத்தில் தப்பி தவறிக்கூட போக்கூடாத பாதை

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: உலகில் அழகான பாதைகள் எல்லாமே அதிக ஆபத்து நிறைந்தவை என்பது விதியாகும். அந்த வகையில் தமிழ்நாட்டின் மிக அழகான மலை நகரங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு செல்லும் ஒரு பாதை, மற்ற எல்லா மலைப்பாதைகளையும் விட மிக அழகானது மட்டுமல்ல.. திரில்லானது.. ஆனால் மழை பெய்யும் காலத்தில் தப்பி தவறிக்கூட இந்த ஒரு பாதையில் போய்விடக்கூடாது..

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு மொத்தம் மூன்று பாதைகள் உள்ளன. முதல் பாதை வத்தலக்குண்டு (திண்டுக்கல்)- காட்ரோடு(தேனி) வழியாக மேலே செல்லும் பாதை.. இதுதான் கொடைக்கானலின் பிரதான பாதை.. இந்த பாதையில் இரண்டு வாகனங்கள் சர்வ சாதாரணமாக போக முடியும். மிகப்பெரிய ஹேர்பின் பெண்டு எதுவும் இருக்காது. ஒரு மலையில் இருந்து இன்னொரு மலையை இணைக்கும் வகையிலேயே மொத்த பாதையும் இருக்கும். இந்த பாதையில் சர்வ சாதாரணமாக எல்லாராலும் ஓட்டிச் செல்ல முடியும்.

tour Kodaikanal theni

அடுத்தாக பழனி வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் பாதை..இந்த பாதை என்பது கொஞ்சம் ஆபத்தானது.. இதில் பாதை சிறியதாகவே இருக்கும். இரண்டு வாகனங்கள் போக முடியும் என்றாலும், வளைவுகள் மிக அதிகமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும். மலைப்பாதையில் வாகனம் ஓட்டி நன்கு அனுபவம் உள்ளவர்களே இந்த பாதையில் வாகனத்தை ஓட்டி செல்ல முடியும். இந்த பாதை பழனியில் தொடங்கி பெருமாள் மலையில் முடியும்.

tour Kodaikanal theni

இறுதியாக அடுக்கம் பாதை... தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து நேரடியாக கும்பக்கரை அருவி வழியாக அடுக்கம் கிராமத்தை அடைந்து அந்த வழியாக அப்படியே பெருமாள் மலைக்கு போகும் பாதை.. இந்த பாதை மிகவும் செங்குத்தான மலைப்பாதையாகும். செங்குத்தான 100 மாடி கட்டிடத்தில் வளைந்து வளைந்து ஏறுவது போல் பாதை இருக்கும்.. பெரியகுளத்தில் தொடங்கும் இந்த பாதை, மாமரங்கள் நிறைந்த மரநிழலில் ஆரம்பிக்கும். மலை அடிவாரம் வரை இந்த பாதை வந்தததற்காக உங்கள் ஆனந்த கண்ணீரே விடும்.. இப்படி பாதையில் பயணிக்காமல் விட்டுவிட்டோமே என்று ஏக்க பெருமூச்சுகூட வரும்..

அதேபோல் கும்பக்கரை அருவி அருகே உள்ள மலை அடிவாரத்தில் தொடங்கி அடுக்கம் கிராமம் வரை மலை உச்சிக்கு செல்ல செங்குத்தான பாதை மிக திரில்லாக இருக்கும். ஒவ்வொரு பாதையை கடக்கும் போது, கீழே உள்ள பாதையை அப்படியே பார்க்க முடியும். எல்லாமே எஸ் பெண்ட் ஆக இருக்கும். அடுக்கம் கிராமம் வரை மலைக்காடுகளும், தண்ணீர் பாதைகளும் மெய்சிலிர்க்க வைக்கும். அடுக்கம் கிராமத்தை அடைந்தால் அதுதான் மலை உச்சி..

tour Kodaikanal theni

அதன்பிறகு பெருமாள் மலை வரை பாதை கீழாக மலையின் பின்பக்கம் இறங்கும். 10 கிமீ தூரம் கீழே இறங்கினால் பெருமாள் மலை வந்துவிடும். அதன்பிறகு எளிதாக கொடைக்கானல் போய்விடலாம். இந்த பாதையில் பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் செல்ல வெறும் 45 கிமீ தான்.தேனி மாவட்டத்தில் உள்ளவர்கள் எளிதாக கொடைக்கானல் போய்விட இந்த பாதை உதவுகிறது.

tour kodaikanal theni

அதேநேரம் இந்த அடுக்கம் பாதை மிகவும் ஆபத்தானது. இருசக்கர வாகனங்கள், கார்களில், மழை இல்லாத காலத்தில் எளிதாக போய் வரலாம். ஆனால் மழை பெய்யும் காலங்களில் தவறிக்கூட போகக்கூடாத பாதையாகும். மலை பெய்யும் காலத்தில் இந்த பாதை அனுபவம் உள்ளவர்களே விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. சாலை மிகவும் செங்குத்தாக கீழே இறங்கும் என்பதால் அடிக்கடி பாறைக்கு உருண்டு வரும் பகுதியாகும். அதுமட்டுமின்றி, மிக அதிகனமழை பெய்தால், சாலைகள் பெயர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் இங்கு சாலை பெயர்ந்து விழுந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி காரில் வந்த சிலர் இறந்தும் போயிருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, மாலை 5 மணிக்குமேல் மறந்தும் அடுக்கம் பாதை வழியாக பெரியகுளத்திற்கு இறங்கக்கூடாது. ஏனெனில் காட்டுமாடுகள் உள்ள வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக உலா வரும். வனவிலங்குகள் அதிகம் வாழும் பகுதியும் இந்த சாலைதான்.. மாலை 6 மணிக்கமேல் கும்பக்கரை அடிவாரம் பகுதியில் சர்வ சாதாரணமாக காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும். மேலும் வேறு வனவிலங்குகளும் வரும் வாய்ப்பு உள்ளது.. எனவே பொதுவாக இரவில் இந்த சாலை பயணத்திற்கு ஏற்றது இல்லை.. மற்றபடி மிகப்பெரிய மழை இல்லாத காலங்களில் அடுக்கம் பாதையில் பயணிக்கலாம். அதில் எந்த பிரச்சனையும் இருக்காது. திரில் அனுபவத்திற்கு சிறந்த பாதையாகும். கனரக வாகனங்கள் இந்த பாதையில் போக முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+