லாங் வீக் எண்ட் வந்தாச்சு.. சென்னைவாசிகள் குடும்பத்துடன் ஜாலி டிரிப் போக அட்டகாசமான 5 இடங்கள் இதோ
சென்னை: திங்கள்கிழமை பக்ரீத் வருவதால் சென்னைவாசிகள் சின்ன டிரிப் செல்ல இந்த லாங் வீக் எண்ட் பக்காவாக இருக்கும்.. இந்த லாங் வீக் எண்டில் சுற்றுலா செல்லக் கூடிய 5 பக்காவான இடங்கள் குறித்துப் பார்க்கலாம். குறைந்த செலவில் இந்த இடங்களை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க முடியும்.
அவ்வளவு தான் லாங் வீக் எண்ட் ஆரம்பித்துவிட்டது. சனி, ஞாயிறு வழக்கம் போல விடுமுறை.. திங்கள்கிழமை பக்ரீத் விடுமுறை என 3 நாள் லீவ் உடன் இது லாங் வீக் எண்டாக அமைந்துள்ளது.

இந்த லாங் வீக் எண்டில் சென்னைவாசிகள் சுற்றிப் பார்க்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கிறது. அதில் குடும்பத்துடன் குறைந்த செலவில் சுற்றிப் பார்க்கக் கூடிய டாப் 5 இடங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
பாண்டிச்சேரி: லிஸ்டில் இருக்கும் முக்கியமான இடம் பாண்டிச்சேரி தான். தலைநகர் சென்னைக்கு தெற்கே உள்ள அழகான கடற்கரை நகரமான பாண்டிச்சேரிக்கு எப்போது சென்றாலும் இளைஞர்களுக்குக் கொண்டாட்டம் தான். அதிலும் லாங் வீக் எண்ட் என்றால் தனியாகச் சொல்லவா வேண்டும்.
பிரெஞ்சு மற்றும் இந்தியக் கலாச்சாரங்களின் கலவையாக இருக்கும் புதுச்சேரியில் சுற்றிப் பார்க்கப் பல இடங்கள் இருக்கிறது. பிரெஞ்ச் காலனித்துவ கட்டிடக்கலை ரசிக்கலாம்.. அதன் அட்டகாசமான கடற்கரையில் காலாற நடக்கலாம்.. ஆன்மீகத்தில் அதிக ஈடுபடு கொண்டவர்களுக்கும் சரி.. ஜாலியாக என்ஜாய் செய்ய விரும்புவோருக்கும் சரி ஏற்ற பல இடங்களைப் புதுச்சேரி கொண்டுள்ளது.
ஏலகிரி: அடுத்து லிஸ்டில் இருப்பது ஏலகிரி.. சென்னைக்கு அருகே இருக்கும் மலைப் பகுதிகளில் இது முக்கியமானது. அழகு மற்றும் கலக்கலான வானிலைக்குப் பெயர் பெற்ற இடமாக இது இருக்கிறது. வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், அதில் இருந்து எஸ்கேப் ஆக இந்த ஏலகிரி சிறந்த ஸ்பாட்டாக இருக்கும். இங்கே புங்கனூர் ஏரியில் படகு சவாரி செய்யலாம்.. வரலாற்றுச் சிறப்புமிக்க ஜலகம்பாறை கோட்டையைச் சுற்றிப் பார்க்கலாம். மேலும், ஏலகிரியில் பாராகிளைடிங் உள்ளிட்ட சாகசங்களும் இருக்கிறது.
கோயில் தலைநகர்: அடுத்து இருப்பது காஞ்சிபுரம்.. இது முழுக்க முழுக்க ஆன்மீக பிரியர்களுக்கானது. காஞ்சிபுரத்தைக் கோயில்களின் நகரம் என்றும் குறிப்பிடுவார்கள். அந்தளவுக்குப் பல முக்கியமான கோயில்களைக் கொண்ட ஊராகக் காஞ்சிபுரம் இருக்கிறது. ஏகாம்பரேஸ்வரர் கோவில் மற்றும் காமாக்ஷி அம்மன் கோவில் எனப் பல முக்கிய கோயில்கள் உள்ளன..
நமது பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் சரியான இடமாகக் காஞ்சிபுரம் இருக்கிறது. மேலும், பட்டுப் புடவைகளின் தலைநகர் எனச் சொல்லும் அளவுக்குப் பல உயர் ரக பட்டுப் புடவைகளும் இங்குக் கிடைக்கும். எனவே, இங்குச் சென்றால் ஷாப்பிங்கையும் லாங் வீக் எண்டில் முடித்துவிடலாம்.
சூப்பர் டிரிப்: அடுத்து பழவேற்காடு - இது சென்னைக்கு வடக்கே கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகும். சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஊரில் தான் பழவேற்காடு ஏரி இருக்கிறது. நமது இஸ்ரோ ராக்கெட்களை அனுப்புமே அந்த ஸ்ரீஹரிகோட்டா இங்கே தான் இருக்கிறது. இங்குச் சென்றுவிட்டு அப்படியே சுமார் 1.30 மணி நேரம் பயணித்தால் தடா எனப்படும் உப்பலமடுகு நீர்வீழ்ச்சிக்குச் செல்லலாம்.. சித்தூர் மாவட்டத்தில் ஸ்ரீசிட்டி அருகே அமைந்துள்ள இந்த இடத்திற்குச் சென்றால் ஜாலியாக ஒரு ஆட்டம் போடலாம்.
பிச்சாவரம்: அடுத்து பிச்சாவரம் சதுப்புநில காடு.. கடலூரில் சிதம்பரம் அருகே அமைந்துள்ள இந்த பிச்சாவரம் சதுப்புநில காடுகள் தான் உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில காடுகளாகும். இயற்கையை ரசிக்க விரும்பினால், கண்ணை மூடிவிட்டு இந்த இடத்திற்குச் சென்றுவிடலாம்.. லாங் வீங் எண்டை கழிக்க ஒரு மிகச் சிறந்த இடமாக இது இருக்கும்.. சிக்கலான நதி அமைப்பும் கால்வாய் வலையமைப்பும் இதற்குத் தனி அழகைத் தருகிறது. படகு சவாரி மூலம் பிச்சாவரம் வனப்பகுதியைக் கண்டு ரசிக்கலாம்..












Click it and Unblock the Notifications