பெங்களூர் ஐடி கம்பெனி மேனேஜர் ஒகேனக்கல் அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. இப்படி ஆகிடுச்சே
தர்மபுரி: தமிழ்நாட்டின் மிகமுக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனலுக்கு சுற்றுலா பயணிகள் கடந்த வாரம் அதிக அளவில் சென்றார்கள். வெயிலின் தாக்கம் அதிகம் காரணமாகவும், ஒகேனக்கல்லில் கிளைமேட் அருமையாக இருப்பதாலும் பலர் அங்கு சென்று வருகிறார்கள். அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற பெங்களூர் தனியார் ஐடி கம்பெனி மேலாளருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ஒகேனக்கல். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ளது ஒகேனக்கல். பெங்களூருவில் இருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது. ஒகேனகலுக்கு பெங்களூர், சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட அருகில் உள்ள பகுதி மக்கள் அடிக்கடி விரும்பி செல்லும் இடமாக இருக்கிறது. அதேநேரம் தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் சுற்றுலா செல்கிறார்கள். தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள காலங்களில் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து கடந்த வார இறுதியில் அருமையாக இருந்த காரணத்தால், பரிசல் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டினார்கள் சுற்றுலா பயணிகள். ஆயில் மசாஜ் செய்து, பிரதான நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்தார்கள். அப்படித்தான் பெங்களூர் ஐடி கம்பெனி மேனேஜர் சுற்றுலா வந்துள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி ரகுராமையா இவரது மகன் ஜோதி கிருஷ்ணா காந்த் வயது 30 . இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார் .
ஞாயிறு அன்று சம்பவம்
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தனது நண்பர்கள் 4 பேருடன் ஒகேனக்கல் வந்துள்ளனர். ஒகேனக்கல் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர் . ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .. இதனால் நண்பர்கள் 4 பேரும் தடையை மீறி சின்னாறு பரிசல் துறை அருகே உள்ள மணல்மேடு காவிரி ஆற்றில் குளித்தனர் .
ஆழம் அதிகம்
அப்போது ஜோதி கிருஷ்ணா காந்த் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு அடித்து செல்லப்பட்டனர் . இருவரும் சத்தம் போடவே அருகில் இருந்த நண்பர் ஒருவரை மட்டும் காப்பாற்றியுள்ளார் . ஜோதி கிருஷ்ணா காந்தை காப்பாற்ற முடியவில்லை .
நண்பர்கள் சத்தம் போட்டனர்
நண்பர்கள் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்று உள்ளனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் போலீசார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஜோதி கிருஷ்ணா காந்த் உடலை மீட்டனர் . இதைப் பார்த்த நண்பர்கள் கலங்கி போனார்கள் . பின்னர் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
32 ஆயிரம் கனஅடி நீர்
இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவி மற்றும் காவிாி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சதீஷ் தற்போது தடை விதித்துள்ளாா்.
நீர்வரத்து அதிகரிப்பு
கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாகவும், 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதுடன், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தபடி உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதித்து மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். இதனால் நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க முடியவில்லை.. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
-
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications