கன்னியாகுமரி அருவிக்கு சுற்றுலா.. கேரள இளம் பெண்ணிடம் ஒரு நிமிட சலனம்.. ஜெயிலில் வங்கி ஊழியர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற அருவிகளில் முக்கியமானது திற்பரப்பு அருவி.. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தினமும் சுற்றுலா வருவார்கள். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த பலர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் போது, அப்படியே திற்பரப்பு அருவிக்கும் வருவார்கள்.. அப்படி வந்து, திற்பரப்பு அருவியில் குளித்துக் கொண்டிருந்த கேரள பிளஸ்-2 மாணவிக்கு என்ன நடந்தது.. தனியார் வங்கி ஊழியரை போலீசார் ஏன் கைது செய்தார்கள் என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் திற்பரப்பு அருவி அமைந்துள்ளது. இது குமரிக் குற்றாலம் என்று கன்னியாகுமரி மக்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுகும். அருவி அமைந்துள்ள பகுதியில் குற்றலாத்திற்கு நிகரான கிளைமேட்டும் இருக்கிறது. இங்கு ஒரு சிவன் கோவிலும் உள்ளது. இந்த திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி காட்சிமுனைக்கு அடுத்தபடியாக பலரும் வந்து செல்லும் முதன்மையான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருக்கிறது.

திற்பரப்பு அருவி சுற்றுலா
திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அடிக்கடி வருகிறார்கள். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையொட்டி ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். அதேநேரம் அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான பகுதியில் மட்டும் குளிக்கிறார்கள்.
கேரள மாணவி
கடந்த அக்டோபர் 2ம் தேதி அன்று கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரும்புழா பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தனது உறவினர்களுடன் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்துள்ளார். அருவியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி தண்ணீர் குறைவாக விழும் பகுதியில் அவர் பாதுகாப்பாக குளித்து கொண்டிருந்தார்.
சத்தம் போட்ட மாணவி
அப்போது அவரது அருகே குளித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞர் திடீரென அந்த மாணவியிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார். மாணவியின் சத்தம் கேட்டு அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அந்த பகுதியில் நின்றவர்கள் விரைந்து வந்து அந்த இளைஞரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் அந்த வாலிபரை அருமனை போலீசில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி வங்கி ஊழியர்
போலீசார் அவரை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த 32 வயதாகும் மாரிசெல்வம் என்பதும், அங்கு ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மாரிசெல்வம் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் திற்பரப்பு அருவியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications