விசாவே தேவையில்ல.. யாருமே பார்க்காத தாய்லாந்தின் சூப்பரான இடங்கள்! முதலில் போக உடனே டிக்கெட் எடுங்க
சென்னை: இந்தியர்கள் விசா இல்லாமலேயே தங்கள் நாட்டுக்கு வரலாம் என தாய்லாந்து அரசு அறிவித்து இருக்கும் நிலையில், அந்நாட்டில் பெரும்பாலானோரால் அறியப்படாத அருமையான சுற்றுலா தலங்களை பார்ப்போம்.
மே ஹாங் சன்: தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 900 கிமீ தொலைவில், மியான்மர் எல்லையோரம் அமைந்து இருக்கும் பகுதி இது. வெளியுலகம் அறியாத எழில்மிகுந்த இடம். தாய்லாந்து நாட்டின் வனப்பகுதிகளை அதிகம் கொண்ட இந்த மாகாணத்தில் பனி சூழ்ந்த மலை தொடர்கள் அதிகம். இங்கு பான் ராக் தாய் என்ற நாட்டின் அழகிய கிராமம், தாம் பிளா தேசிய பூங்கா, அழகிய பாய் நதி, பைக் ரைடர்களுக்கு பிடித்தமான மே காங் சான் லூப், பூபா வியூ பாயிண்ட், கேம்ப் போடுவதற்கான பாங் உங் பகுதி என ஏராளமான இடங்கள் உள்ளன.

காவ் யாய்: தாய் மாகாணத்தில் உள்ள நகாவுன் ரட்சசிமா பகுதியில் அமைந்துள்ள அழகிய இடம். இங்குள்ள தேசிய பூங்கா மிகவும் பிரபலம். 10 ஆயிரம் வகையான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன போன்றவைகள் உள்ளன. அங்கு அமைந்து உள்ள உயரமான நீர் வீழ்ச்சியை பல திரைப்படங்களில் பார்த்திருக்க முடியும். பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய பகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது.

ஹுவா இன்: பாங்காக்கில் இருந்து 200 கிமீ தென் மேற்கு திசையில் அமைந்துள்ள இது ஒரு மீனவ கிராமமாகும். ஏராளமான நீர் விளையாட்டுக்கள், குதிரை சவாரி, கோல்ப் விளையாட்டுக்கள், ஏராளமான சாகச விளையாட்டுக்களை ஆடி மகிழலாம். இதில் குறிப்பாக ஹுவா ஹின் கடற்கரை, யானை கிராமம், ஆர்ட் சேக் ஆர்ட் கேலரி, குயின்ஸ் பார்க் போன்றவை சுற்றுலா பயனிகளுக்கு மகிழ்வான அனுபவத்தை தரும்.

கோ யாவ் நொய்: தாய்லாந்தில் உள்ள ஒரு அழகிய தீவு இது. கோ நோக், காவ், பிலகே டே பசாய், லாங் பீச், உன்பாவ் பியர், மன்கே பே போன்ற ஏராளமான குட்டி குட்டி தீவுகள் இதை சுற்றியுள்ளன. இங்கு ஸ்பீட் போட்டிங், ஸ்கூபா டைவிங், மலையேற்றம், முவே தாய் பயிற்சி போன்றவையும் செய்யலாம். புகெட் துறைமுகத்தில் இருந்து 30 நிமிட கடற் பயணத்தில் இந்த தீவை அடையலாம்.

சுகோதாய்: 13 வது நூற்றாண்டில் இருந்த தாய் மன்னராட்சிகாலத்தை பிரதிபலிக்கும் வரலாற்று சிறப்பு மிகுந்த பகுதி இது. பழங்கால கட்டிட அமைப்புகள், கோயில்கள், பூங்காக்கள், அரண்மனைகள் இங்கு உள்ளன. இது அல்லாமல் டிரெக்கிங் செல்வதற்கும், கேம்ப் போடுவதற்கும் உகந்த பகுதியாக இது இருக்கும்.













Click it and Unblock the Notifications