கோவா, கேரளா மாதிரி சூப்பரான கடற்கரைகள் இருந்தும்.. பீச் சுற்றுலாவை கர்நாடகா கண்டுக்கல தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவின் கடலோரப் பகுதி தன்னுடைய அழகிய கடற்கரைகள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. ஆனால், சுற்றுலாவை மேம்படுத்துவது மற்றும் அதே நேரத்தில் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது அரசுக்கு ஒரு சவாலாக மாறிவிட்டது. இதனால், கடலோர சுற்றுலாவை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தவில்லை.
மங்களூர், உடுப்பி, கார்வார், கோகர்ணா என பெயர் பெற்ற கடலோர சுற்றுலா தலங்களை ஏராளமாக கொண்டதுதான் கர்நாடகா. ஆனால் எங்கே பிரச்சினை எழுகிறது தெரியுமா. ஒரு அலசல் இதோ.
கேரளா, கோவா போல இல்லாமல் கர்நாடகாவிலுள்ள மீனவ சமூகமான மொகவீர (Mogaveera) சமூகம், சுற்றுலாவை மேம்படுத்தினால் ஏற்படும் எதிர்மறைத் தாக்கத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறது. வெளியாட்களின் வருகை உள்ளூர் கலாச்சாரத்தை பாதிக்கலாம் மற்றும் இளைஞர்களை போதை உள்ளிட்ட தவறான பாதையில் தள்ளலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். சில இடங்களில், தார்மீகக் காவல் ரோந்து செல்லும் வலதுசாரி அமைப்பினர் மற்றும் வகுப்புவாத பதற்றம் சுற்றுலாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

வலதுசாரியினர் ஆணும், பெண்ணும் ஃப்ரீயாக சுற்றுவதை விரும்புவதில்லை. ஹோட்டல்களுக்குள் புகுந்து ஜோடிகளை தாக்கிய சம்பவங்கள் கடலோர கர்நாடக மாவட்டங்களில் நடந்துள்ளன.
சில தொழில்முனைவோர் இந்த சவால்களை சமாளிக்க புதிய வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக, ஷாகா சர்ப் கிளப், மொகவீர சமூகத்தினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, அவர்களை சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது. இதன் மூலம், உள்ளூர் மக்களின் வருமானம் அதிகரிப்பதோடு, சுற்றுலாவும் மேம்படுகிறது.
ஆனால், அரசாங்கத்தின் முயற்சிகள் போதுமானதாக இல்லை. தற்போதைய சுற்றுலா பிரச்சாரம் நாட்டிலுள்ள பிற சுற்றுலா பயணிகளை சென்று சேர்ந்து, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இயற்கை அழகு மற்றும் கலாச்சார பாரம்பரியம் நிறைந்த கடலோர மாவட்டங்களுக்கு போதுமான ஊக்குவிப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை.
உள்ளூர் விருந்தோம்பல் துறையிலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. டாக்சி ஓட்டுநர்கள், உணவகங்கள் மற்றும் பிற சேவைத்துறை சுணங்கியபடி உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவை தேவை.
இந்த சவால்களுக்கு மத்தியில், கர்நாடக அரசு மற்றும் உள்ளூர் சமூகம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மங்களூர் சுற்றுலா இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ள வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
கடலோர கர்நாடகாவில் சுற்றுலாவை வளர்ப்பதற்கும் அதே நேரத்தில் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் இடையே சமநிலையைக் கண்டறிவதில்தான் அரசுக்கு சிக்கல் நிலவுகிறது. மது போன்ற விஷயங்கள் கோவா போல ஆறாக ஓடிவிடும் என்று அஞ்சும் உள்ளூர் சமூகத்தினரின் ஆதங்கத்தை தீர்க்க முடியாமல் அரசுகள் தொடர்ந்து தடுமாறி வருகின்றன. ஒருவேளை இதற்கு தீர்வு கண்டால், அரபிக் கடல் கொஞ்சும் கர்நாடக கடலோர மாவட்டங்கள் பெரும் வளர்ச்சி பெறும்.
-
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications