சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்
சென்னை: சென்னையில் வேலை செய்யும் பலருக்கும், கல்லூரியில் படிக்கும் பலருக்கும் ஒரு ஞாயிறு அல்லது வார இறுதியில் அருவிக்கு செல்ல வேண்டும் என்றால்... தடா அருவி தான் முதல் விருப்பமாக இருக்கிறது. தடா பால்ஸ் என்று விரும்பி அழைக்கப்படும் இந்த இடம் சென்னை கோயம்பேட்டில் இருந்து 2.5 மணி நேரத்தில் போய்விட முடியும். சுமார் 90 கிமீ தூரத்தில் இருக்கிறது. இங்கு டிரக்கிங் செல்வது பலருக்கும் பிடிக்கும்.. அப்படி தடா அருவிக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை மக்கள் தடா நீர்வீழ்ச்சியை அதிகம் விரும்புகிறார்கள்.. ஏனெனில் சென்னைக்கு மிக அருகாமையில் (சுமார் 80 - 95 கி.மீ) உள்ள முக்கியமான இயற்கை நீர்வீழ்ச்சி தடா தான். சென்னையில் மூன்று ஆறுகள் ஓடினாலும், தமிழ்நாட்டில் எங்குமே இல்லாத அளவிற்கு ஏரிகள், குளங்கள் நிறைந்து காணப்பட்டாலும் எதிலுமே போய் குளிக்க முடியாது.. சென்னையில் அருவி மற்றும் ஆறுகளை விரும்பும் மக்கள், தடா அருவியை தான் விரும்கிறார்கள்.

கோயம்பேடு அல்லது வில்லிவாக்கத்தில் இருந்து அதிகாலையில் கிளம்பினால் சுமார் 2 அல்லது 3 மணி நேரத்திலேயே போய்விட முடியும், ஒரே நாளில் சென்று திரும்ப இது வசதியாக உள்ளது. இந்த தடா அருவிக்கு காரிலோ பைக்கிலோ சென்று இறங்கியவுடன் அருவி வந்துவிடாது. கணிசமான தூரம் கற்கள் மற்றும் ஓடைகளுக்கு நடுவே நடந்து செல்ல வேண்டும். இந்த 'ட்ரெக்கிங்' அனுபவம் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
ஊட்டி, கொடைக்கானல் போல அதிக செலவு இல்லாமல், பெட்ரோல் மற்றும் குறைந்தபட்ச உணவுக் கட்டணத்திலேயே ஒரே நாளில் சுற்றுலாச் சென்று வரலாம். ஆந்திர மாநில எல்லையில் இருப்பதால், நகரத்தின் இரைச்சல் இல்லாமல் அமைதியாக இருக்கும். ஆனால் வெயில் தான் கடுமையாக இருக்கும். மலைக்குள் சென்றாலும் காடுகளை தவிர மற்ற இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனினும் அந்த வெயிலுக்கு நடுவில் அருவியில் குளிப்பது பலருக்கும் பிடிக்கும். தடா அருவி தான் கோடைகாலங்களில் சென்னை மக்களின் முக்கியமான பொழுது போக்காக இருக்கிறது. அப்படி பொழுதுபோக்காக சென்ற மாணவர்களுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 8 மாணவிகள் உட்பட 10 பேர் நேற்று காலை ஒரே காரில் ஆந்திர மாநிலம் தடா நீர்வீழ்ச்சிக்குச் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். காரை கல்லூரி மாணவர் ராஜமூர்த்தி (வயது 21) ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கவரைப்பேட்டை அருகே தச்சூர் பகுதியில் உள்ள சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் 3 முறை பல்டி அடித்து கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யபிரியா (19) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜமூர்த்தி மற்றும் மாணவி ஹரிணி (20) ஆகியோர் படுகாயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 7 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுபற்றி கவரைப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications